இந்தியாஉலக செய்திகள்கிரைம்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னில் உடல்நிலை கடும் கவலைகிடமாக இருப்பதாக தகவல்?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

பியோங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை கடும் ஆபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

advertisement by google

உலகமே கொரோனா வைரஸ் குறித்து அஞ்சி கொண்டிருக்கும் நிலையில், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என, அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்தி உலகத்தை மிரட்டி வந்தவர் கிம் ஜாங் உன்.

advertisement by google

ஏப்.12ம் தேதி இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், கிம்மின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

advertisement by google

வடகொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் பிறந்தநாள் விழா ஏப்.15ம் தேதி சூரியனின் நாள் என்ற பெயரில் ஆண்டு தோறும் விழாவாக கொண்டாடப்படும். இந்த விழாவில் வடகொரிய அதிபர் உள்பட உயர் அதிகாரிகள் பங்கேற்பது வழக்கம்

advertisement by google

2011ம் ஆண்டில் பதவியேற்றதில் இருந்து முதன்முறையாக கிம் ஜாங் உன் பங்கேற்காமல் இருந்துள்ளார். கடைசியாக 4 நாட்களுக்கு முன் ஏப்.11ம் தேதி நடந்த அரசு கூட்டத்தில் கிம் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

advertisement by google

வடகொரியாவில் பத்திரிகை சுதந்திரம் கிடையாது. தலைவர்கள் குறித்த தகவல்கள் எளிதில் வெளியாகாது. ஏறக்குறைய தலைவர்களை நாட்டின் தெய்வமாக மக்கள் கருதுவர். முக்கியமான நிகழ்வில் கிம் பங்கேற்காதது அவரது உடல்நலம் குறித்து சந்தேகத்தை கிளப்பியது

advertisement by google

கிம்மின் உடல்நலம் குறித்த தகவல்கள் நம்பகமானவை ஆனால் அதன் தீவிரத்தை மதிப்பிடுவது கடினம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

advertisement by google

வடகொரிய விவகாரங்களை உன்னிப்பாக கவனிக்கும் தென்கொரிய இணைய பத்திரிகையான டெய்லி என்.கே., ஏப்.12ம் தேதி கிம் ஜாங் உன்னிற்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக கூறியுள்ளது.

அதிகளவு புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக கிம்மின் இதய பாதிப்பு ஏற்பட்டது. தற்போது ஹியாங்சன் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கிம்மின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததாக கூறவே, நேற்று முன் தினம் (ஏப்.19) பியோங்யாங் திரும்பியதாக செய்தி வெளியிட்டுள்ளது

கிம் ஜாங் உன்னின் தந்தையான கிம் ஜாங் இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 2008ல் நடந்த வடகொரியாவின் 60 ஆண்டு விழாவில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த ஜாங் இல் 2011ல் உயிரிழந்தார். கடந்த 2014ம் ஆண்டு இதே போல் ஒரு மாதம் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் மாயமான கிம்மின் உடல்நலம் குறித்து கேள்வி எழுந்தது. அப்போது மீண்டும் கிம் ஜாங் உன் வலம் வந்தார். சில நாட்களுக்குப் பிறகு தென் கொரிய உளவுத்துறை , கிம் தனது கணுக்கால் நீர்க்கட்டியை அகற்றி இருப்பதாக கூறியிருந்தது

advertisement by google

Related Articles

Back to top button