இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்

ஜீன்17முதல் நியாயவிலைக்கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியாற்ற முடிவு?முழு விவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

ஜூன் 17 முதல் நியாய விலைக்கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியாற்ற முடிவு

advertisement by google

தமிழக நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜூன் 17-ஆம் தேதி முதல் நியாயவிலைக்கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியாற்ற முடிவு செய்து, அறிவித்துள்ளனர்.

advertisement by google

இதுகுறித்து தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க பொதுச் செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா இன்று (திங்கள்கிழமை) சிதம்பரத்தில் தெரிவித்தது:

advertisement by google

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் சரியான எடையில் தரமான உணவுப் பொருள்களை வழங்க வேண்டும். கட்டாய இறக்குகூலி வசூலிக்கக்கூடாது, கரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு (ரூ.50 லட்சம்) திட்டத்தில் சேர்க்க வேண்டும். சென்னை சைதாப்பேட்டை கடை எண்:5-ல் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த ஊழியர் சுரேஷ் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை ரூ.50 லட்சமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்

advertisement by google

விற்பனையாக ரூ.500 மதிப்புள்ள மளிகை தொகுப்பு பொருள்களை அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். கட்டாயப்படுத்தி கட்டுபாடற்ற பொருள்களை நியாய விலைக்கடைகளில் விற்பனைக்கு அனுப்புவதை தவிர்க்கப்பட வேண்டும். மேலும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் மற்றும் மே, ஜூன் மாதத்திற்கான ஊக்கத் தொகை ரூ.2500 இதுவரை வழங்கப்படவில்லை. எனவே மேற்கண்ட ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும். காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

advertisement by google

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நடத்தும் ரேஷன் கடைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். மேலும் மகளிர் சுயஉதவிக்குழு கடைகளுக்கும், கூட்டுறவு நியாயவிலைக்கடை நிறுவனங்களுக்கும் விளிம்பு தொகை வழங்கப்பட வேண்டும். நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற ஜூன் 17-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என கோ.ஜெயச்சந்திரராஜா தெரிவித்தார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button