இந்தியாஉலக செய்திகள்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்வரலாறு

யப்பா பிரதமர்மோடி பயன்படுத்தும் புதியகாரின் விலை இதுதானாம்?

advertisement by google

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்… யாருகிட்டயும் சொல்லீராதீங்க…

advertisement by google

பிரதமர் மோடி புதிய கார் ஒன்றை பயன்படுத்த தொடங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

advertisement by google

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது செல்வாக்கு மிக்க உலக தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார். எனவே அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தியாவின் மிக முக்கியமான நபர் என்பதால், பாதுகாப்பு வசதிகள் அதிகம் நிறைந்த அதிநவீன கார்களைதான் பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருகிறார்.

advertisement by google

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக உருவெடுத்தபோது, பதவியேற்பு விழாவிற்கு வர கவச மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பயன்படுத்தினார். குஜராத் முதல்வராக இருந்த சமயத்திலும், தேர்தல் பிரசாங்களிலும் இதே காரைதான் மோடி உபயோகித்தார். இதன்பின் பிரதமராக பதவியேற்ற பிறகு, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி காரை நரேந்திர மோடி பயன்படுத்த தொடங்கினார்.

advertisement by google

இதுதான் இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ கார். இதன் பிறகு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் சென்டினல் காரையும் பிரதமர் மோடி பயன்படுத்த தொடங்கினார். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டபோது இந்த காரில் பிரதமர் நரேந்திர மோடி வலம் வருவதை நம்மால் காண முடிந்தது. இதன்பின் பழைய தலைமுறை டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரையும் மோடி பயன்படுத்தினார்.

advertisement by google

இவ்வாறு தற்போது வரை பல்வேறு கார்களை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவரது அதிகாரப்பூர்வ காரான பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி காரை தற்போதைய நாட்களில் அவரது கான்வாயில் காண்பது என்பது அரிதாக உள்ளது. இந்த சூழலில் புதிய கார் ஒன்றை பிரதமர் மோடி பயன்படுத்த தொடங்கியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

advertisement by google

லேட்டஸ்ட் ஜெனரேஷன் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காருடன் பிரதமர் மோடியை தற்போது நம்மால் பார்க்க முடிந்துள்ளது. பிரதமர் மோடி சமீபத்தில் தாய்லாந்து சுற்றுப்பயணம் சென்று விட்டு இந்தியா திரும்பினார். அவரது வருகையை சில செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதில், லேட்டஸ்ட் ஜெனரேஷன் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் மோடி ஏறுவதை நம்மால் பார்க்க முடிந்தது.

advertisement by google

இங்கே குறிப்பிடத்தகுந்த விஷயம் ஒன்று உள்ளது. இது இதற்கு முன்பாக மோடி பயன்படுத்திய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கிடையாது. அது பழைய தலைமுறை கார். இது லேட்டஸ்ட் ஜென்ரேஷன் ஆகும். இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 1.70 கோடி ரூபாய். இதன் ஆன் ரோடு விலை சுமார் 2 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும்.

தரமான சம்பவம்… ஒரு பைக்கின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான ரியல் ஹீரோ… என்ன செய்தார் தெரியுமா?

இங்கே குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயமும் உள்ளது. இது ரெகுலர் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் இல்லை. இந்தியாவின் மிக முக்கியமான நபர் ஒருவரை சுமந்து செல்லும் கார் என்பதால், பாதுகாப்பு வசதிகள் அதிகம் நிறைந்த கவச காராக இது மாற்றப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ், லேண்ட் ரோவர் மற்றும் பிஎம்டபிள்யூ போல் டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கவச வாகனங்களை வழங்குவதில்லை.

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைக்கு அபராதம்… போலீஸை அலற விட்ட பாசக்கார தந்தை…

எனவே வெளியில் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் மூலம் பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு, கவச காராக மாற்றப்பட்டிருக்கலாம். இது பிரதமர் மோடி பயன்படுத்தும் கார் என்பதால், இதற்கு ஆன செலவு எவ்வளவு என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த காரில், 4.5 லிட்டர் வி8 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.தல, தளபதி படங்களின் எதிர்பார்ப்பை ஓவர்டேக் செய்த எம்ஜி எலெக்ட்ரிக் கார்! இந்த புதிய தகவல்தான் காரணம்

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 262 பிஎச்பி பவர் மற்றும் 650 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. மோடி போன்ற நபர்களுக்கு இதுபோன்ற கார்கள் மிகவும் அவசியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்திய பிரதமரின் புதிய கார் குறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரியப்படுத்துங்கள்.


பிரதமர் மோடிக்கு புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் வாங்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், அவரின் பயன்பாட்டிற்காக 2 புதிய அதிநவீன விமானங்கள் வாங்கப்படவுள்ளன. இதன் மதிப்பு மற்றும் மிரட்டலான பாதுகாப்பு வசதிகள் குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக இந்திய பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார். இதனால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பயன்படுத்தும் கார் மற்றும் விமானங்களில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய நிலையில் ஏர் இந்தியாவின் பி747 (B747) விமானங்களில்தான் பிரதமர் மோடி பறந்து வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்லாது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரும் கூட பி747 விமானங்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் மிக முக்கியமான நபர்கள் பயணிக்கும் இந்த பி747 விமானங்களை ஏர் இந்தியாவின் பைலட்கள்தான் இயக்கி வருகின்றனர்.

ஏஐஇஎஸ்எல் எனப்படும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் (AIESL – Air India Engineering Services Limited) அவற்றை பராமரித்து வருகிறது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரின் பயன்பாட்டிற்காக 2 புதிய விமானங்களை இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது.

பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் ஆகியோரின் பயணங்களுக்காக இரண்டு பி777 (B777) விமானங்களைதான் இந்தியா வாங்கவுள்ளது. பி777 விமானங்களை போயிங் 777 (Boeing 777) என்றும் அழைக்கலாம். அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்தால் இந்த விமானங்கள் உருவாக்கப்படுகின்றன.

2020ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த விமானங்களை இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்த உள்ளனர். ஆனால் இந்த விமானங்களை ஏர் இந்தியா பைலட்கள் இயக்க போவதில்லை. அதற்கு பதிலாக ஐஏஎஃப் எனப்படும் இந்திய விமான படையை (IAF- Indian Air Force) சேர்ந்த பைலட்கள்தான் போயிங் 777 விமானங்களை இயக்கவுள்ளனர்.

எனினும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் மூலம்தான் இந்த விமானங்கள் பராமரிக்கப்படும். புதிய போயிங் 777 விமானங்களை இயக்குவதற்காக இந்திய விமானப்படையை சேர்ந்த 4-6 பைலட்கள் ஏற்கனவே பயிற்சி பெற்று விட்டனர். வரும் மாதங்களில் இன்னும் கூடுதலான பைலட்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனத்தின் ஆலையில் இருந்து 2 புதிய போயிங் 777 விமானங்கள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிற்கு வரும். ஐஏஎஃப் பைலட்களால் மட்டுமே இந்த 2 புதிய விமானங்களும் இயக்கப்படும்” என்றார். இந்தியாவின் முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே இந்த 2 புதிய விமானங்களும் பயன்படுத்தப்படும்.

பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோருக்காக வாங்கப்படவுள்ள 2 புதிய விமானங்களில், Large Aircraft Infrared Countermeasures (LAIRCM) எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் (Missile Defence Systems) இடம்பெற்றிருக்கும்.

இதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பயன்படுத்தும் போயிங் 747-200பி (Boeing 747-200B) விமானத்திற்கு இணையான பாதுகாப்பை இந்திய பிரதமர் மோடியின் போயிங் 777 விமானமும் பெறும். மேலும் இந்தியா வாங்கவுள்ள இரண்டு புதிய போயிங் 777 விமானங்களில் எஸ்பிஎஸ் எனப்படும் சுய பாதுகாப்பு அறைகளும் (SPS – Self-Protection Suites) இடம்பெற்றிருக்கும்.

இந்த 2 பாதுகாப்பு அமைப்புகளையும் இந்தியாவிற்கு விற்பனை செய்ய கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இதன் மொத்த மதிப்பு 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவர்களுக்கு இவ்வாறான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த விமானங்கள் அத்தியாவசியமான ஒன்றுதான்.

advertisement by google

Related Articles

Back to top button