உலக செய்திகள்தொழில்நுட்பம்வரலாறு

நாசாநிலவு பயணத்தில் வீரர்களுக்கு2நவீனஉடை அறிமுகம்

advertisement by google

advertisement by google

நாசா தனது நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான இரண்டு நவீன விண்வெளி உடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.பதிவு: அக்டோபர் 16, 2019 18:03 PM

advertisement by google

வாஷிங்டன்,அமெரிக்கா வரும் 2024-ஆண்டு விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள உடைகளில் ஒன்று நிலவின் தென் துருவத்தில் விண்வெளி வீரர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது அவர்கள் எளிதாக அதிகபட்ச அசைவுகளை மேற்கொள்ளும் வகையிலும், எளிதான கைகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்கு வழிவகுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இரண்டாவது உடையான ஆரஞ்ச் நிற உடை விண்வெளி வீரர்கள் நிலவுக்குப் புறப்பட்டுச் செல்லும் போதும், பின்னர் மீண்டும் திரும்பும் போது புவிச் சூழலுக்குள் நுழையும் போதும் ஏற்படும் சூழல் மாறுபாடுகள் விண்வெளி வீரர்களின் உடல் நிலையை பாதிக்காமல் காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.கடந்த முறை நிலவின் தென் துருவத்துக்கு நாசா அனுப்பிய ராக்கெட் அங்கு மோதிச் சிதறியது. ஆனாலும் அதன் மூலம் நிலவின் மேற்பரப்புக்குக் கீழ் பெருமளவிலான பனிக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button