உலக செய்திகள்

சீனாவில் வண்டுகளை கடத்த முயன்றதாக விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்

advertisement by google

சீனாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கவுங்டாங்க் மாகாணத்தில் உள்ள பையூன் விமான நிலையமும் ஒன்று. நாட்டிலேயே 3-வது பெரிய விமான நிலையமான இங்கு பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் சுங்கத்துறையினரால் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அங்கு ஒரு பெண் பயணிக்கு சொந்தமான பெட்டியை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில், பிளாஸ்டிக் தாள்களும், சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கண்டறியப்பட்டன. தொடர்ந்து நடந்த சோதனையில் கணிசமான எண்ணிக்கையில் வண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், உயர் கசாஸ் வண்டு, ஆரஞ்சு முதுகு வண்டு, அட்லஸ் வண்டு உள்பட 11 வகையான வண்டுகள் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வண்டுகள் அனைத்தும் சீனாவில் பூர்வீக வாழ்விடம் இல்லாத அன்னிய இனங்களாக கருதப்படுகின்றன. உரிய அனுமதியின்றி உயிருள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களை நாட்டுக்கு கொண்டு வருவது சட்ட விரோதமானது என கூறி அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button