இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்விளையாட்டு

தமிழகம்இந்தியாஉலகம் விரிவான காலைசெய்திகள்(5.10.2019)

advertisement by google

????விண்மீண்நியூஸ்????செய்தி கதம்பம்
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் காவல் நீட்டிப்பு

advertisement by google

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் காவலை அக்டோபர் 18-ம் தேதி நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் கொடூர வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன், மணிவண்ணன் ஆகியோரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
தடை நீங்கியவுடன் நல்ல தீர்ப்பு வரும் ; அப்பாவு பேட்டி

advertisement by google

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கான தடை நீங்கியவுடன் நல்ல தீர்ப்பு வரும் என்று அப்பாவு தெரிவித்துள்ளார். ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு மறுவாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின் சென்னையில் பேட்டியளித்தார்
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ♦நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மாபெரும் தவறு-விமானப்படை தலைவர்

advertisement by google

?கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் பிப்.27 அன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான Mi-17 V5 ஹெலிகாப்டர் காஷ்மீரின் புத்காம் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

advertisement by google

?இச்சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட 7 பேர் இதில் மரணமடைந்தனர். இதனை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டது.

advertisement by google

?குழப்பத்தில் இந்த ஹெலிகாப்டரை தவறுதலாக இந்திய விமானப்படை விமானிகளே சுட்டு வீழ்த்தியதாக பின்னர் தெரியவந்தது.

advertisement by google

?இச்சம்பவம் தொடர்பாக புதிதாக விமானப்படை தலைவராக பொறுப்பேற்றுள்ள பதூரியா கூறுகையில், Mi-17 V5 ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டது எங்கள் தரப்பின் மிகப்பெரிய தவறு, இதனை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.

advertisement by google

?வான் பாதுகாப்பை கையாளும் பிரிவில் நம் நாட்டு ஹெலிகாப்டரை, பாகிஸ்தான் ஹெலிகாப்டர் என தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாலேயே இது நிகழ்ந்தது என்றும் பதூரியா கூறினார்.

?இது தொடர்பாக விசாரணை முடிக்கிவிடப்பட்டுள்ளது. விரைவில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

?இதே நாளில்தான் இந்திய விமானி அபிநந்தன் MiG-21 ரக விமானத்தில் பாகிஸ்தானின் அதிநவீன F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பின்னர் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

♦Friends Social Media
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ♦பட்டா கத்தியால் கேக் வெட்டி ரவுடிகள் கொண்டாட்டம்

?சென்னையில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

?கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி, புளியந்தோப்பை சேர்ந்த அயப்பன், தனது பிறந்தநாளை நண்பர்கள் சரத்குமார், சாமுண்டீஸ்வரன், விக்கி ஆகியோருடன் கொண்டாடியுள்ளார்.

?அப்போது, பட்டா கத்தியைக் கொண்டு கேக்கை வெட்டியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை தேடிவந்தனர்.

?இந்நிலையில், மாநகராட்சி ஊழியர் ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் விசாரணை நடத்திய போது, அரிவாளால் கேக் வெட்டிய நபர்களே பண பறிப்பிலும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஐயப்பன், சாமுண்டீஸ்வரன், சரத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். தலைமறைவாக விக்கியை போலீசார் தேடி வருகின்றனர்.


[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: “49பிரபலங்கள் மீதான தேசதுரோக வழக்கு விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் உடனடியாக தலையிட வேண்டும்.”
-பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கம் வேண்டுகோள்.

“பசு பாதுகாப்பு”, “ஜெய் ஸ்ரீராம் கோஷம்” போன்றவற்றை ஆயுதமாக்கி சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் அதிக அளவில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் பலர் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்தும், மேற்கண்ட காரணங்களுக்காக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த கோரியும் பாரத பிரதமருக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் திரு. மணிரத்தினம், நடிகை ரேவதி உள்ளிட்ட சுமார் 49பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதியிருந்தனர்.

49பிரபலங்களும் பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியமைக்காக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் கொடுத்திருந்த வழக்கின் மீது பீகார் மாநிலம், முசாபபூர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்த சூழ்நிலையில் தற்போது மேற்கண்ட 49பிரபலங்கள் மீதும் “தேசத்துரோகம்”, “பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல்”, “மத உணர்வுகளை புண்படுத்துதல்”, “அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல்” ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் காவல்துறையினர் நேற்று வழக்குப் பதிவு செய்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

“கருத்துரிமை”, “பேச்சுரிமை”, “எழுத்துரிமை” நிறைந்த ஜனநாயக நாடான நமது இந்தியாவில் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த கோரி பாரத பிரதமருக்கு கடிதம் எழுதிய காரணத்திற்காக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மாண்பமை பொருந்திய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும், அந்த உத்தரவின் பேரில் பீகார் காவல்துறையினர் “தேசதுரோகம்” உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதும் இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, இது நாடு முழுவதும் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிடும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாகவே உணர்கிறோம்.

ஏனெனில் இந்த செயல் தேசத்தின் நலன் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த மாநில முதல்வர்களுக்கு, ஆளுநர்களுக்கு, இந்திய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுபவர்கள் மீதும் மேற்கண்ட நிகழ்வுகள் போல் வழக்குகள் பாய்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறதோ…? என்கிற சந்தேகம் மேலோங்கி நிற்கிறது.

கோரிக்கை வைத்து பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக பிரபலங்களாக இருப்பவர்கள் மீதே சட்டத்தின் பெயரால் வாய்ப்பூட்டு போடும் முயற்சிகள் நடைபெறுவதை காண்கையில் நாளை “சாமானிய மக்கள் எவரும் தங்களின் உரிமைகளுக்காக அரசிடமோ, ஆட்சி பீடத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களிடமோ எந்த ஒரு கோரிக்கைகளையும் முன் வைக்கவோ, பேசிடவோ, எழுதிடவோ கூடாது” அதையும் “மீறி செய்தால் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக, சாமானிய மக்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று மிரட்டல் விடுக்கவே இது நடைபெறுகிறதோ என்கிற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

எனவே தமிழ் திரைப்பட இயக்குனர் திரு. மணிரத்தினம், நடிகை ரேவதி உள்ளிட்ட சுமார் 49பிரபலங்கள் மீது பீகார் காவல்துறையினர் “தேசதுரோகம்” உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிந்துள்ள வழக்கினை திரும்ப பெறவும், இது போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் தடுக்கவும் பிரதமர் அலுவலகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்
சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனர் & மாநில தலைவர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
05.10.2019 / காலை 7.56மணி.
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

இன்றைய முக்கிய செய்திகள்

இந்தியா, வங்கதேசம் இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து. பிரதமர் நரேந்திர மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இருதரப்பு பேச்சுவார்த்தை.

சகிப்பின்மை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு. சர்வாதிகார ஆட்சியை நோக்கத்தோடு செல்வதா;க ராகுல் காந்தி கண்டனம்.

திருச்சி நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் தீவிர விசாரணை. கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் உள்ளிட்ட 7 பேருக்கு வலைவீச்சு.

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை. அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு.

நாங்குநேரியில் பரப்புரையை இன்று தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவளிப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை கோலாகலம். லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு பக்திப் பரவசம்.

ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் கால் சதவிகிதம் குறைத்தது ரிசர்வ் வங்கி. வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் குறைகிறது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா சிறப்பான ஆட்டம். டீன் எல்கர், குயின்டன் டி காக் சதம் அடித்து அசத்தல்.
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
தருமபுாி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மலா்விழி வெளியிட்டார்.

தருமபுாி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விவரத்தை ஆட்சியர் அறிவித்தார்.

ஆண் வாக்காளர்கள் 614798

பெண் வாக்காளர்கள் 593501

இதரர் 124

மொத்தம் 1209652

வாக்காளர்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ திருத்தம் செய்ய வேண்டியதாக இருந்தால் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மலா்விழி தெரிவித்தார்
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

பேனர்கள் வைப்பதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்று பாமக ராஜ்யசபா எம்.பி., அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்

அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண்ணின் ஸ்கூட்டர் மீது விழுந்தது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி மோதியதில், அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த நிலையில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் அடுத்த வாரம் மகாபலிபுரம் வரும் போது, அவர்களை வரவேற்று பேனர் வைக்க தமிழக அரசு தீவிரமாக இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது. இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின் இளைஞரணி தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி அளித்த பேட்டியில், சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் வருகைக்காக பேனர்கள் வைப்பதைத் தமிழக அரசு முற்றிலும் தவிர்க்க ண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில், சாலையோரங்களில் பேனர்கள் வைப்பது தேவையற்றது. மற்ற நாடுகளில் இது போன்ற கலாசாரம் கிடையாது. ஆனால் இங்கு தான் பேனர் வைப்பது, சுவர் விளம்பர கலாசாரம் போன்றவை உள்ளது. இது தேவையற்றது. சென்னை வரும் சீன அதிபருக்கு பேனர் வைக்க அரசு விதிவிலக்கு கேட்டு இருக்கின்றார்கள்.பேனர்கள் வைக்க கூடாது என்பது பா.ம.க வின் கொள்கை. அரசியல் கட்சிகள், தமிழக அரசு என அனைவரும் இதை தவிர்க்க வேண்டும். நீட் மருத்துவ படிப்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். கடந்த ஆண்டு நீட் சேர்க்கை குறித்தும் விசாரித்து, அதில் தவறு செய்த மாணவர்களையும் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கோரிக்கைவிடுத்தார்.
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ???நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் பிரசாரம்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்து, வாக்குகள் சேகரிக்க உள்ளார்.
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ???அரியானாவில் சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

அரியானா மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ???பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு: நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

கும்பல் கொலைகளை தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ???பிரதமரிடம் பேச பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தைரியம் இல்லை- குமாரசாமி

கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை பெறுவதற்காக பிரதமரிடம் பேச பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தைரியம் இல்லை என்று குமாரசாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ???சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப்பின் காஷ்மீரில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு துறைகள் முடங்கி இருப்பதால் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கின்றனர்.
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ???குரூப்-2 தேர்வுக்கு பழைய பாடத்திட்டமே தொடர வேண்டும் – போட்டி தேர்வு மாணவர்கள் கூட்டமைப்பினர் பேட்டி

குரூப்-2 தேர்வுக்கு பழைய பாடத்திட்டத்தையே தொடர வேண்டும் என்றும், அப்படி இல்லாவிட்டால் அரசு வேலை எட்டா கனியாகிவிடும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ???யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ???உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயார் – மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர்(பொறுப்பு) ஆர்.லலிதா தெரிவித்தார்.
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ???இந்தியா-இலங்கை இடையே காந்தி தபால்தலை பரிமாற்றம்

நல்லுறவு அடிப்படையில் இந்தியா-இலங்கை இடையே காந்தி தபால்தலை பரிமாற்றம் செய்யப்பட்ட விழா சென்னை தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது.
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ???மராட்டியத்தில் காங்கிரஸ் தோல்வியடையும் – மூத்த காங்கிரஸ் தலைவர்

மராட்டியத்தில் காங்கிரஸ் தோல்வியடையும் என்றும் ராகுல் காந்தியின் விசுவாசிகள் கட்சியில் இழிவுப்படுத்தப்படுவதாக சஞ்சய் நிருபம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
[10/5, 10:40 AM] விண்மீண்நியூஸ்2: ???நமது விமானத்தை நமது ஏவுகணையே தவறுதலாக தாக்கிவிட்டது – இந்திய விமானப்படை தளபதி

பாகிஸ்தான்) விமானப்படையினருடன் நடந்த சண்டையின் போது எதிர்பாராத விதமாக நமது ராணுவ ஹெலிகாப்டரை நமது ஏவுகணையே தவறுதலாக தாக்கிவிட்டதாக விமானப்படை தளபதி பக்தாரியா தெரிவித்துள்ளார்.
[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ?®? இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பிரதமர் மோடி இடையே இன்று நடைபெறவுள்ள சந்திப்பின்போது, 6 முதல் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன…

?‹செய்திகளஞ்சியம்›?
[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ?®? எச்.டி.ஐ.எல்.நிறுவனத்திற்கு 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில்,

⭕ பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்த ஜாய் தாமஸ் கைது செய்யப்பட்டுள்ளார்…

?‹செய்திகளஞ்சியம்›?
[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ?®? பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு சர்வதேச உறவுகளை வளர்த்துக் கொள்ள எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என தெரியவில்லை என வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது…

?‹செய்திகளஞ்சியம்›?
[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ?®? ஹரியானா மாநிலத்தில் வரும் 21ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

⭕ தற்போது, அங்கு ஆட்சியில் உள்ள பாஜக ஆட்சியை தக்க வைக்கவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக களமிறங்கி உள்ளன…


[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ?®? விசாரணையில் மணிகண்டன் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை: போலீசார் தகவல்…


[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ?®? சென்னை தரமணியில் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

⭕ வீட்டு உரிமையாளர் முகைதீனின் கறிக்கடையில் பணியாற்றி வந்த சையது மற்றும் அவரது சகோதரர் அப்துல்லாவை போலீசார் கைது செய்துள்ளளர்…


[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ???பிரதமரிடம் பேச பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தைரியம் இல்லை- குமாரசாமி

கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை பெறுவதற்காக பிரதமரிடம் பேச பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தைரியம் இல்லை என்று குமாரசாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ???சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப்பின் காஷ்மீரில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு துறைகள் முடங்கி இருப்பதால் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கின்றனர்.
[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ⭕ டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே தகுதி

3,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார் அவினாஷ் சாப்ளே…

⭕ வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் இணையதளம் மூலம் பெயர் சேர்க்கலாம்.

மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

⭕ விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்…

தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் நெல்லை தேதிப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜகுரு மற்றும் ஸ்டாலின் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்…

⭕ மழை நிவாரணம்: பிரதமரிம் பேச பாஜக எம்பி, எம்எல்ஏக்களுக்கு தைரியமே இல்லை…

குமாரசாமி அட்டாக்…

⭕ கொள்ளையடித்து ஊருக்கு உதவும் பலே கொள்ளையன் திருவாரூர் முருகனை தேடும் போலீஸ்…

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்பு?…

?‹செய்தி®களஞ்சியம்›?
[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ???பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு: நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

கும்பல் கொலைகளை தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ???நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் பிரசாரம்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்து, வாக்குகள் சேகரிக்க உள்ளார்.
[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ???குரூப்-2 தேர்வுக்கு பழைய பாடத்திட்டமே தொடர வேண்டும் – போட்டி தேர்வு மாணவர்கள் கூட்டமைப்பினர் பேட்டி

குரூப்-2 தேர்வுக்கு பழைய பாடத்திட்டத்தையே தொடர வேண்டும் என்றும், அப்படி இல்லாவிட்டால் அரசு வேலை எட்டா கனியாகிவிடும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ???உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயார் – மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர்(பொறுப்பு) ஆர்.லலிதா தெரிவித்தார்.
[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ???இந்தியா-இலங்கை இடையே காந்தி தபால்தலை பரிமாற்றம்

நல்லுறவு அடிப்படையில் இந்தியா-இலங்கை இடையே காந்தி தபால்தலை பரிமாற்றம் செய்யப்பட்ட விழா சென்னை தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது.
[10/5, 10:42 AM] விண்மீண்நியூஸ்2: ???மராட்டியத்தில் காங்கிரஸ் தோல்வியடையும் – மூத்த காங்கிரஸ் தலைவர்

மராட்டியத்தில் காங்கிரஸ் தோல்வியடையும் என்றும் ராகுல் காந்தியின் விசுவாசிகள் கட்சியில் இழிவுப்படுத்தப்படுவதாக சஞ்சய் நிருபம் குற்றஞ்சாட்டி உள்ளார்.???winmeennews.com???

advertisement by google

Related Articles

Back to top button