இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அன்பு விண்மீன்நியூஸ் வாசக உறவுகளே இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்?

advertisement by google

அன்பு உறவுகளே…
முன்கூட்டிய இனிய தீபாவளி வாழ்த்துகள்‌.

advertisement by google

தீபாவளியன்று வெடி வெடிக்கும் காலம் குறைவு.அதற்காக அவசரமாக வெடி வெடிக்கக் குழந்தைகள் முன் வரக்கூடும். எனவே இருக்கும் நேரத்தை குழந்தைகளுடன் இருந்து பெற்றோர்கள் வெடிகளை வெடியுங்கள்.சில முன்னெச்சரிக்கைகளை மனதில் கொண்டு..

advertisement by google

தீபாவளி பட்டாசு வெடிக்கையில் கையாள வேண்டிய எச்சரிக்கைகள்..

advertisement by google

1.சங்கு சக்கரத்தை சிமெண்ட் தரையில் வைத்துக் கொளுத்த வேண்டும். மண் தரையில் வைத்து விடக்கூடாது.

advertisement by google
  1. பூச்சட்டிகளை எக்காரணம் கொண்டும் கையில் வைத்துப் பற்ற வைக்கக் கூடாது.
  2. கம்பி மத்தாப்புக்களை கொளுத்தும் போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு எரிந்த கம்பிகளை அதனுள் போட்டு விட வேண்டும். தரையில் எரிந்தால் அது உங்களது காலில் பட்டுத் தீக்காயம் ஏற்பட்டு விடும்.
  3. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து சோதித்துப் பார்க்கக் கூடாது. தண்ணீர் ஊற்றி அணைத்து விட வேண்டும்.
  4. பட்டாசுத் திரிகளை பற்ற வைக்க தீக்குச்சிகளை உபயோகிக்கக் கூடாது. பட்டசுகளுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பத்திக் குச்சிகளை மட்டும் தான் உபயோகிக்க வேண்டும்.
  5. பாம்பு மாத்திரைகளை வீட்டுக்கு வெளியே தான் கொளுத்த வேண்டும். வீட்டிற்குள் கொளுத்தினால் அதனால் ஏற்படும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  6. பட்டாசுகளை மருத்துவமனை அருகிலோ அல்லது குறுகலான தெருக்களிலோ உபயோகிக்கக் கூடாது.

8.பட்டாசுகளைத் தூக்கி எறியவோ அல்லது காலால் எட்டி உதைக்கவோ கூடாது.

advertisement by google
  1. ராக்கெட் வெடிகளைக் கொளுத்தும் போது உயரமான பாட்டில்களிலோ அல்லது பைப்புகளிலோ மட்டும் தான் உபயோகிக்க வேண்டும்.
  2. குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்கச் செய்யுங்கள். வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்கக் கூடாது.
  3. குழந்தைகளை பெரியவர்களின் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிக்கச் செய்யுங்கள்.
  4. குழந்தைகளை சட்டைப் பைகளில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.
  5. பட்டாசுகளைக் கொளுத்தும் பொழுது இறுக்கமான ஆடை அணியுங்கள் முடிந்த வரை பருத்தி ஆடையாக இருக்கட்டும்.
  6. எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீ விபத்து ஏற்பட்டால் ஓடாதீர்கள்.
    உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள் அல்லது கீழே படுத்து உருளுங்கள்.
  7. தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள். விரைவில் மருத்துவரிடம் சொல்லுங்கள்..

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button