உலக செய்திகள்

ரஷியா விண்வெளி வீரர் விண்வெளியில் அதிகக் காலம் தங்கி சாதனை!

advertisement by google

மாஸ்கோ: ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் கோனோனெங்கோ விண்வெளியில் அதிகக் காலம் இருந்தவர் என்ற சாதனையைப் படைத்திருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

advertisement by google

ஒட்டுமொத்தத்தில், 59 வயது கோனோனெங்கோ கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளை விண்வெளியில் கழித்துள்ளார்.

advertisement by google

முன்னதாக, இன்னொரு ரஷ்ய விண்வெளி வீரரான கென்னடி படல்கா 878 நாள் 11 மணி 29 நிமிடம் 48 நொடிகளை விண்வெளியில் கழித்திருந்தார். அவர் அச்சாதனையை 2017ல் நிகழ்த்தியிருந்தார்.

advertisement by google

இந்நிலையில், ஐந்தாம் முறையாக 2023 செப்டம்பர் 23ஆம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்ட கோனோனெங்கோ, இப்பயணம் முடிந்ததும் மொத்தம் 1,110 நாள்களை விண்வெளியில் கழித்திருந்திருப்பார்.

advertisement by google

தமது 34வது வயதில் விண்வெளிப் பயணத்திற்கான பயிற்சியை அவர் தொடங்கியதாக ஐரோப்பிய விண்வெளிக் கழக இணையத்தளம் தெரிவிக்கிறது.

advertisement by google

கோனோனெங்கோ முதன்முறையாக 2008 ஏப்ரல் 8ஆம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டார்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button