இந்தியாஉலக செய்திகள்தொழில்நுட்பம்வரி விளம்பரங்கள்

போகோ(POCO)வின் அடுத்த மொபைல் ரெடி?அறிமுகமானது poco F2pro?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

போகோவின் அடுத்த மொபைல் ரெடி..!’ – அறிமுகமானது Poco F2 Pro

advertisement by google

போகோ பிராண்டின் அடுத்த மொபைலான போகோ F2 ப்ரோ (Poco F2 Pro) அறிமுகமாகியுள்ளது. முதல் மொபைல் வெளியீட்டிலேயே அதிரி புதிரி ஹிட்டடித்ததால், போகோவின் அடுத்த மொபைலுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்துவந்தது. கடந்த பிப்ரவரி மாதம், அதன் இரண்டாவது மொபைலான போகோ X2 வெளியானது. இரண்டாவது மொபைலும் சிறப்பான வரவேற்பைப் பெற்ற நிலையில், போகோ பிராண்டின் மூன்றாவது மொபைல் போன் தற்போது அறிமுகமாகியுள்ளது

advertisement by google

இந்த மொபைல், ரெட்மீ K30 ப்ரோவின் ரீ-பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அதைப் போலவே ரீ-பிராண்டட் வெர்ஷனாக போகோ F2 ப்ரோ வெளியாகியுள்ளது.

advertisement by google

6 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் மற்றும் 8 GB RAM + 256 GB ஸ்டோரேஜ் என இரண்டு வேரியன்ட்களில் இந்த F2 ப்ரோ கிடைக்கும். Snapdragon 865 புராசஸருடன் களமிறங்கியிருக்கும் போகே F2 ப்ரோ, சர்வதேச விலையை வைத்துப் பார்த்தால், இந்தியாவில் தோராயமாக 40,000 – 50,000 ரூபாய் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இந்த மொபைல் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும், இந்தியாவில் இதன் விலை இன்னும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

ஷாவ்மி நிறுவனத்திலிருந்து பிரிந்து தனி நிறுவனமாக இயங்கி வந்தாலும், தற்போது வெளியாகியிருக்கும் F2 ப்ரோவில் ஷாவ்மியின் MIUI மென்பொருளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலில் 5G வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் நான்கு கேமராக்களும் (64 MP + 13 MP + 5 Mp + 2 MP) முன்புறம் 20 MP செல்ஃபி கேமரா ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. 4700 mAh பேட்டரி வசதியுடன் 30 W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதால், ஒரு மணி நேரத்தில் 100 சதவிகிதம் சார்ஜ் ஆகிவிடும். இந்த மொபைல் Phantom White, Electric Purple, Neon Blue மற்றும் Cyber Grey என நான்கு வண்ணங்களில் வெளிவந்துள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button