இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

50கிலோ வெங்காயத்தை கொள்ளையடித்ததாக இரண்டு பேர் கைது?

advertisement by google

உத்தரப் பிரதேசத்தில் 50 கிலோ வெங்காயத்தை கொள்ளையடித்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

advertisement by google

வெங்காய உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் இந்த ஆண்டு கொட்டி தீா்த்த பருவமழையால் வெங்காய பயிா்கள் அழிந்தன. நாடு முழுவதும் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், சந்தைக்கு வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயா்ந்தது.

advertisement by google

இதனால், நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. இதையடுத்து வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படிமத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

advertisement by google

இதற்கிடையே, நாடு முழுவதும் பல இடங்களில் வெங்காயம் பதுக்கி வைக்கப்படுவதும், வெங்காயம் திருடப்படும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

advertisement by google

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் கோல்கர் என்ற பகுதியில் நின்று கொண்டிருந்த ரிக்ஷாவில் இருந்து 50 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. ஹோட்டலுக்கு அனுப்பவிருந்த 50 கிலோ கணக்கிலான 6 சாக்குப்பைகள் இருந்த நிலையில், பைக்கில் வந்த நபர்கள், ஒரு சாக்குப்பையை(50 கிலோவெங்காயம்)திருடிச் சென்றுள்ளனர். தொடர்ந்து சம்மந்தப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து வெங்காயத்தையும் பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

advertisement by google

வெங்காயத்தின் விலை உயர்ந்ததால் பெங்களூரு மற்றும் மகாராஷ்டிராவில் வெங்காயத்தை ஏற்றிச் செல்லும் லாரிகள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button