இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திவிளையாட்டு

உலகபட்ட செய்திகள்(காலை)10.10.2019

advertisement by google

????விண்மீன்நியூஸ்????நேரலை செய்திகள்

advertisement by google

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

advertisement by google

சென்னையில் நேற்று வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.43 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.57 ஆகவும் விற்பனையானது. இன்று, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், பெட்ரோல் விலையில் 5 காசு குறைத்து 76.38 ஆகவும் டீசல் விலையில் 6 காசு குறைத்து 70.51 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

advertisement by google

தண்டவாள பராமரிப்பு மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் காரணமாக நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரம் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

advertisement by google

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து  தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு 12க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான  மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

advertisement by google

இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் 4வது நடைமேடையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் டிசம்பர் 7ம் தேதி  வரை எழும்பூர் ரயில்நிலையம் 4வது நடைமேடையில் இருந்து தினமும் இரவு 7.50 மணிக்கு இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரம் ரயில்நிலையத்தில்  இருந்து அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இயக்கப்படும்.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

advertisement by google

பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ தந்தை ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு, சிறையில் இருக்கும் பேனர் ஜெயபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ???மாமல்லபுரத்தை தேர்வு செய்த ஜின்பிங்

advertisement by google

மாமல்லபுரத்தின் வரலாற்றுப்பின்னணியையும், கலாசாரத்தையும் அறிந்துதான் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு ஜின்பிங் இந்த மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ?அரசியல் சூழ்ச்சி ??

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபரை இந்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது

இந்தியா, சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து பேசவுள்ளனர்.

இதற்காக, வரும் 11 ஆம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

விமான நிலையத்தில் இருந்து, கிண்டியில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதிக்கு செல்லும் வழியில் ஜி ஜின்பிங்கை வரவேற்க, கரகாட்டம், தப்பாட்டம், துடும்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கிண்டி எம்.எஸ்.எம்.இ அலுவலகம் அருகே தென்னக பண்பாட்டு மையம் சார்பாக தப்பாட்டம் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கலை பண்பாட்டுத் துறை சார்பாக, கிண்டியில் உள்ள தனியார் விடுதியின் நுழைவு வாயிலில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசையுடன் கூடிய வரவேற்பும் அளிக்கப்படுகிறது

ஓய்விற்குப் பின், தனியார் விடுதியில் இருந்து மாமல்லபுரம் புறப்படும் போது, சீன அதிபருக்கு நாதஸ்வரம் மற்றும் தவில் இசையுடனான சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து ஓ.எம்.ஆர்., பல்லவரம் ரேடியல் சந்திப்பில், சிறப்புமிக்க ராஜஸ்தான் சக்ரி மற்றும் கல்பெலிய நடனமும், சிறப்பு மிக்க மத்தியபிரதேச நடனமான பாதேய் மற்றும் பாரேடி நடனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர், மாயாஜால் திரையரங்கு எதிரில், சிறப்பு மிக்க பஞ்சாபிய நடனமான பாக் கூமர் மற்றும் ஒடிசாவில் புகழ்பெற்ற நடனமான சாம்பல்புரி நடனத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மாமல்லபுரத்தில் உள்ள தாஜ் ஹோட்டல் அருகே, கலை பண்பாட்டுதுறை சார்பாக தப்பாட்டமும், திருவிடந்தை அருகே தென்னக பண்பாட்டு மையம் சார்பாக பஞ்ச வாத்தியமும் இசைக்கப்படுகிறது.

மேலும், சீன அதிபருக்கு நெம்மேலி அருகே கர்நாடக சிறப்பு நடனமான தொல்லு குனிதா கலை நிகழ்ச்சியோடு, புலிக்குகை மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே, கலை பண்பாட்டுத் துறை
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ???போலீசாரை தாக்கிய போதை மருந்து கும்பல்- வீடியோ

அரியானாவில் போதை மருந்து வியாபாரிகளை பிடிக்கச் சென்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ???தமிழகம் பாலைவனமாகாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்: வைகோ

தமிழகம் பாலைவனமாகி விடாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்’ என்று வைகோ பேசினார்.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ???தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டதாலயே ராகுல் பிரசாரம் செய்ய வரவில்லை: பட்னாவிஸ்

எதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டதாலயே ராகுல்காந்தி பிரசாரம் செய்யவரவில்லை என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ???அவதூறு வழக்குகள் விசாரணை – ராகுல் காந்தி 2 கோர்ட்டுகளில் இன்றும், நாளையும் ஆஜர்

அவதூறு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்றும், நாளையும் கோர்ட்டில் ஆஜராகிறார்.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ???சாப்பாட்டில் தலைமுடி – மனைவியை மொட்டையடித்த வாலிபர்

சாப்பாட்டில் தலைமுடி இருந்ததால் தனது மனைவிக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ???மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் – வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி 13ம் தேதி பிரச்சாரம்

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ???சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்: அமித்‌ஷா

சட்டவிரோதமாக குடியேறிய ஒவ்வொருவரும் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று அமித்‌ஷா கூறினார்.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ???பீகார் ராஜ்யசபா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சதீஷ் சந்திர துபே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ???35 ஆண்டுகளில் 93 கொலைகள் – அமெரிக்காவை அதிரவைத்த கொடூர கொலைகாரன்

1970-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையிலான 35 ஆண்டுகளில் 93 பெண்களை தாம் கொலை செய்ததாக கூறி சாமுவேல் லிட்டில் அதிரவைத்துள்ளார்.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ???ஈரானில் மைதானத்துக்கு சென்று கால்பந்து போட்டிகளை காண பெண்களுக்கு அனுமதி

ஈரானில் கால்பந்தாட்ட போட்டிகளை மைதானங்களுக்கு சென்று பார்க்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ???தாய்லாந்தில் மீண்டும் பரிதாபம் – அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலி

தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலியாகின.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ???இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு

இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முசாபர்நகர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ?% ?? ஈரோடு : சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியாமல் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவதி

?% தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் மருத்துவர்கள் , செவிலியர்கள் பங்கேற்றதால் சிகிச்சை பெற முடியாமல் அவதி

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ?% சென்னை : மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் அவதி

?% சீன அதிபரின் வருகையையொட்டி மரக்கிளைகளை சீர்படுத்தும் பணி நடப்பதால் போக்குவரத்து நெரிசல்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ?% நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மு க ஸ்டாலின் இன்று பிரச்சாரம்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ?% கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ?% துபாயில் இருந்து விமானத்தில் கடத்திய 28.64 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

?% தங்கத்தை கடத்திய முகமது ரபிக் , ஹைதர் கான் , முகமது யூனுஸ் , அப்துல்ரஹீம் ஆகியோரிடம் விசாரணை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/10, 10:39 AM] விண்மீன்நியூஸ்: ?அரசியல் சூழ்ச்சி ??

பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்தில் இருந்து 6 புள்ளி 9 சதவீதமாக குறைத்துவிட்டது.

ஓய்வு பெற்ற மற்றும் வயது முதிர்ந்த பலர் வங்கிகள் தரும் வட்டியில்தான் தங்கள் வாழ்வாதாரமாக கருதுகின்றனர்

பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் ஒரு லட்சத்திற்கான முதலீட்டிற்கு வட்டிவிகிதத்தை 3புள்ளி 50 ல் இருந்து 3 புள்ளி 25 ஆக மாற்றி, கால் சதவீதம் குறைத்துள்ள நிலையில் இதர வங்கிகளும் இதனை பின்பற்ற உள்ளன.

கூடுதல் வட்டிக்காக மூத்த குடிமக்கள் இனி பங்குச்சந்தை போன்ற வெளி முதலீடுகளை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்

நாட்டில் தற்போது நான்கு கோடிக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் உள்ளனர். அவர்களின் கணக்குகளில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.வட்டி விகிதம் குறையும் போது இத்தொகை முழுவதுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் வட்டி விகிதங்கள் குறைந்துள்ள நிலையில், மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

வட்டி விகிதம் 6 சதவீதத்திற்கும் கீழாக போகும் போது வட்டியை நம்பி வாழும் மூத்த குடிமக்களிடம் அது சமூக ரீதியான அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் மல்லிகார்ஜூன ராவ் கருத்து தெரிவித்துள்ளார்

8 சதவீத வட்டிக்கு பழகியிருக்கும் மூத்த குடிமக்கள் தற்போது 6 முதல் 7 சதவீத வட்டிக்கு தள்ளப்பட்டுள்ளனர். பணவீக்கம் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதையும் வங்கி அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

advertisement by google

Related Articles

Back to top button