தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடியில் மீனவர்கள் கூட்டுறவு கடன்சங்கம் – கனிமொழி எம்.பி. திறந்து வைப்பு

advertisement by google

தூத்துக்குடி:தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி யினை கனிமொழி எம்.பி, திறந்து வைத்தார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-முதல்-அமைச்சர் உத்தர வின்படி மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தொழில், கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வழங்க ப்படும். இந்த வங்கியை பயன்படுத்தி உங்கள் தொழிலை, வாழ்வா தாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் நோக்க மாகும். மீனவர்களின் கோரி க்கைகளை மீன வர்கள் மாநாட்டிலேயே நிறைவேற்றியது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இவ்வாறு அவர் பேசினார். ெதாடாந்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி அமைத்து தரவேண்டும் என்ற மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு மீனவர் சங்கங்கத்தில் உள்ளவர்களும் இந்த வங்கியின் மூலம் பய னடைய முடியும் என்றார். அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், இந்த வங்கி மூலம் குறைந்த வட்டியில் மீனவர்களுக்கு நகைக்கடன் கொடுக்கப்படும். மாலத்தீவு அரசினால் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார் என்று பேசினார். நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமிபதி, துணைமேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவை த்தலைவர் செல்வராஜ், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், மீன்வள நலவாரிய மாநில உறுப்பினர் அந்தோணி ஸ்டாலின், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் விஜய ராகவன், மீன்பிடித்து றைமுக மேம்பாட்டு செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், உதவி பொறியாளர் தயாநிதி, ஆய்வாளர்கள் ஜெகன், சுப்பிரமணியன், ஷிபாணி, கவுன்சிலர்கள் எடின்டா, மரியகீதா, சரவணக்குமார், நாகேஸ்வரி, பவாணி மார்ஷல், வைதேகி, சுப்புலட்சுமி, சுதா, ரெக்ஸின், ஜெயசீலி, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ராம கிருஷ்ணன், ஜெயக்குமார், மேகநாதன், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர் சண்முகவடிவு, வட்டசெயலாளர் டென்சிங், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், இலக்கிய அணி துணை தலைவர் நலம் ராஜேந்திரன், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, மற்றும் கருணா, மணி, மகேஷ்வரசிங், டோலி, கன்னிமரியாள், ரேவதி, சந்தனமாரி, பெல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button