இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் மூன்று இடங்களில் காய்கறிச்சந்தை? கொரனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை?

advertisement by google

கோவில்பட்டியில் மூன்று இடங்களில் தினசரி சந்தை

advertisement by google

கோவில்பட்டி நகராட்சி சார்பில் கூடுதலாக இரு இடங்களில் தினசரி காய்கனி விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ஓ.ராஜாராம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

advertisement by google

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் தினசரி சந்தையிலுள்ள காய்கனி, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட 125 கடைகள் தற்காலிகமாக புறவழிச்சாலையிலுள்ள கூடுதல் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் முக்கியப் பங்கான பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில கோவில்பட்டி எட்டயபுரம் சாலை வ.உ.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் கதிரேசன் கோயில் சாலையிலுள்ள ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை முதல் தினசரி சந்தை செயல்படும். பொதுமக்கள் அந்தந்த பகுதியிலுள்ள தினசரி சந்தைக்குச் சென்று காய்கனிகளை வாங்கிச் செல்லவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

advertisement by google

பொதுமக்களின் வசதிக்கேற்ப நடமாடும் காய்கனி வாகனமும் செயல்படுகிறது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கவும், கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது பொதுமக்களின் ஒத்துழைப்பே. இதை முறையாக பொதுமக்கள் கடைப்பிடிக்குமாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button