சிரிக்க சிந்திக்க

பக்கத்து வீட்டு பிரச்சனைக்காக , வயதான ஓய்வுபெற்ற முதியவரின் காரைச் சேதப்படுத்திய குற்றத் திற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த தாடிபாலாஜி முன்னாள் மனைவி நித்யா, பொங்கி எழுந்து பாஜகவில் சேரப்போவதாகவும் ,தாம் பெண்களுக்காக பாடுபட உள்ளதாகவும் சம்மந்தமே இல்லாமல் தற்பெருமை பேசி,லஞ்சம் கேட்டு கொடுக்காததால் போலீசார் தன்னை கைது செய்ததாக ,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

லஞ்சம் கேட்டு கொடுக்காததால் போலீசார் தன்னை கைது செய்ததாக தாடி பாலாஜியின் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பக்கத்து வீட்டு பிரச்சனைக்காக பொங்கி எழுந்து பாஜகவில் சேரப்போவதாகவும் தாம் பெண்களுக்காக பாடுபட உள்ளதாகவும் தன் பெருமை பேசியிருக்கிறார்.

advertisement by google

சென்னை கொளத்தூர் சாஸ்திரி நகர் தெருவில் வசித்து வரும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியாவுக்கும், வீட்டருகே வசித்து வரும் ஓய்வுபெற்ற ஆசிரியர் மணி என்பவருக்கும் இடையே சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி மணியின் காரை நித்தியா கற்களால் சேதப்படுத்தியதாக சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

advertisement by google

இதனையடுத்து நித்தியா மீது புகார் அளிக்கப்பட்டு, வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் மாதவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் புனையப்பட்ட சிசிடிவி காட்சியை வெளியிட்டு தன் மீது பொய்யாக வழக்குபதிவு செய்துவிட்டதாக கூறி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி காவல் ஆணையர் அலுவலகம் வந்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

advertisement by google

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நித்தியா, கடந்த ஒரு வாரமாக எதிர்வீட்டுகாரரான மணி என்பவருடன் கார் பார்க்கிங் பிரச்சனை நிலவி வந்தது. இதனால் தொடர்ந்து தன்னையும், தனது குழந்தையும் இழிவான வார்த்தைகளால் மணி குடும்பத்தினர் திட்டி வந்தனர். மணியின் காரை தான் கற்களால் சேதப்படுத்தியதாக வந்த சிசிடிவி காட்சிகள் புனையப்பட்டவை .துணிவு படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் செல்லும் போது, அங்கு சாவி கீழே விழுந்ததால் அதை தேடினேன். பொய்யாக புனையப்பட்ட சிசிடிவி காட்சியை காண்பித்து மணி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் அதிகப்படியான பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். நான் தர மறுத்ததால் எனது பெயரை களங்கப்படுத்தவே அவர்கள் காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்துள்ளனர். தாடி பாலாஜியுடன் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வழக்குகளில் காவல்துறைக்கு எதிராக செயல்பட்டதாகவும் அப்போது போலீசாருக்கு லஞ்சம் கொடுக்காததால் காவல்துறையினர் பழிவாங்குவதாகவும் நித்திய குற்றம் சாட்டியுள்ளார் .

advertisement by google

மேலும் தொடர்ந்து பேசிய அவர், கடைசி வரை பக்கத்து வீட்டுக்காரருடன் என்ன பிரச்சனை என்பதை தெளிவாக தெரிவிக்காமல் பெண்கள் மேம்பாடு, பெண் தலைவர்களை, பற்றி பேசி பாஜகவில் சேரப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது பக்கத்து வீட்டு பிரச்சனைக்கு புகார் அளிக்க வந்த தாடி பாலாஜியின் மனைவி நித்யா பாஜகவில் சேர போவதாக கூறியது அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button