இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சுவரில் துளையிட்டு லலிதா ஜீவல்லரியில் 50கோடி மதிப்புள்ள நகை கொள்ளை

advertisement by google


நகைக்கடையில் ரூ. 50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை.

advertisement by google

முகமூடி… கையுறை… மிளகாய் பொடி…! திருச்சி நகைக்கடையில் ரூ. 50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

advertisement by google

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜூவல்லரியில், பல கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

advertisement by google

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் லலிதா ஜுவல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இரண்டு தளங்களை கொண்ட இந்த கட்டடத்தில், இன்று கீழ் தளத்தில் இருந்த நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

advertisement by google

ரூ.50 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

advertisement by google

நள்ளிரவில் கடையின் பின்புறம் வழியாக சுவரில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள், நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

advertisement by google

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கையில், அதிகாலை சுமார் 1 மணியளவில் முகமூடியுடன் கையுறை அணிந்து நுழைந்த இரு கொள்ளையர்கள் நகைகளை பையில் கொள்ளயடித்துச் சென்றது பதிவாகியுள்ளது.

advertisement by google

நகைக்கடையின் பின்புறம் இருக்கும் கல்லூரி மைதானத்தின் வழியாக அவர் உள்ளே வந்துள்ளனர். மோப்ப நாய் தங்களை கண்டறியக்கூடாது என்பதற்காக மிளகாய் பொடியும் அங்கே தூவியுள்ளனர்.

தடவியல் துறையினர் நகைக்கடையில் ஆய்வு நடத்தி வருகின்றனர். போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவரில் உள்ள அந்த ஓட்டையை பார்த்தால் அவ்வளவு பெரிசாக இருக்கிறது. ஒரு ஆள் உள்ளே புகுந்து வெளியே வரும் அளவுக்கு கனகச்சிதமாக ஓட்டைய போட்டு.. லலிதா ஜுவல்லரியில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை ஆட்டைய போட்டுள்ளனர் கொள்ளையர்கள்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே லலிதா ஜூவல்லரி நகைக் கடை உள்ளது. 5 வருஷமாக இங்குதான் செயல்பட்டு வருகிறது. நேத்து ராத்திரி வழக்கம்போல, கடை ஊழியர்கள் வேலையை முடித்து வீட்டுக்கு சென்றுவிட்டார்கள்

எப்பவுமே 6 வாட்ச்மேன்கள் இந்த கடைக்கு வெளியே நைட் டியூட்டியில் இருப்பார்களாம். அப்படிதான், கடைக்கு வெளியே இரவெல்லாம் காவல் இருந்துள்ளனர். குழந்தைகள் மாஸ்க் போட்டுக் கொண்டு.. சாவகாசமாக உள்ளே புகுந்த 2 பேர்.. லலிதா ஜுவல்லரி பயங்கரம்!அதிர்ச்சிஆனால் இன்று காலை கடையை திறந்து பார்த்தால், நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது 3 மாடி கட்டிடம்.. இங்குள்ள முதல் தளத்தில்தான் கொள்ளை நடந்துள்ளது. ஷோ-கேஸில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் எல்லாமே அபேஸ் ஆகி இருந்தது. இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.விசாரணைவிஷயத்தை கேள்விப்பட்டு, திருச்சி மாநகர கமிஷனர் அமல்ராஜே நேரடியாக கடைக்கு வந்துவிட்டார்

பிறகு போலீஸ் அதிகாரிகள் கடையை ஆய்வு செய்தனர். அப்போது, கடையின் மேற்கு பகுதியில் உள்ள சுவரில் ஒரு பெரிய துளை இருப்பதை பார்த்தனர். ஒரு ஆள் உள்ளே நுழைந்து வெளியே ஈஸியாக வந்துவிடும் அளவுக்கு அந்த ஓட்டை இருந்தது. அந்த துளை வழியாகத்தான் கொள்ளையர்கள் உள்ளே வந்திருக்க கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்

ரூ.50 கோடிஆனால் கொள்ளையர்கள் யார் என உறுதியாக தெரியவில்லை. அநேகமாக வடமாநில கொள்ளைக் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எப்படியோ கொள்ளை போன வைரம், தங்க நகைகளின் மதிப்பு 50 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து விசாரணை நடந்து வருகிறது.மோப்ப நாய்நைட் டியூட்டி வாட்ச்மேன்களையும் போலீசார் விசாரித்து வருவதுடன், கடைக்கு உள்ளே, கடைக்கு வெளியே உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்து வருகிறார்கள். இதில் 2 பேர் கடைக்கு உள்ளே வருவது தெரிகிறது. ஆனால் அவர்கள் முகமூடி அணிந்துள்ளனர்

இன்னொரு பக்கம் மோப்பநாய், வரவழைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 100 கிலோ நகைகளுடன் மாயமான அந்த கொள்ளையர்களை 7 தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.அதிர்ச்சிஆனால் கொள்ளையர்கள் உஷாராக, கொள்ளையடித்து சென்ற வழி வரைக்கும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். கிட்டத்தட்ட ஒன்றே முக்கால்மணி நேரம் வரை கடைக்குள் பொறுமையாக இருந்து நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். திருச்சி நகரின் மையப்பகுதியில், அதுவும் கடையை சுற்றி இவ்வளவு கேமராக்கள் இருப்பது தெரிந்தும்.. துணிகரமாக இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது சாமான்ய மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button