இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவிவசாயம்விளையாட்டு

தமிழகபள்ளிக்கு அள்ளி கொடுத்த அமெரிக்க மருத்துவர், ஒன்றரை ஏக்கர் நிலம் ரூ12 லட்சம்

advertisement by google

ஒன்றரை ஏக்கர் நிலம்.. ரூ.12 லட்சம் ரொக்கம்… தான் படித்த பள்ளிக்கு அள்ளிக் கொடுத்த அமெரிக்க மருத்துவர்

advertisement by google

கோவை

advertisement by google

பெற்ற தாய், தந்தையரை கவனிப் பதற்கே கணக்கு பார்க்கும் காலம் இது. ஆனால் அப்படியான மனிதர்களுக்கு மத்தியில், தான் படித்த அரசுப் பள்ளிக்கு ஒன்றரை ஏக்கர் நிலம், ரொக்கம் என கொடுத்து, கிராமப்புற மாண வர்களுக்கு கல்வி வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறார் மூதாட்டி ஒருவர். கடல் கடந்து வந்து உதவி வரும் அவரின் சேவை வியக்க வைக்கிறது.

advertisement by google

கோவை செட்டிபாளையத்தை அடுத்துள்ளது கள்ளப்பாளையம் கிராமம். இங்குள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் சின்னக்குயிலி, பெரியகுயிலி, தேகானி, பாப்பம் பட்டி என சுற்றுவட்டார கிராமங் களைச் சேர்ந்த மாணவ, மாணவி யர் பயின்று வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டுவரை, இது உயர் நிலைப் பள்ளியாகவே இருந்தது. அதற்குமேல் படிக்க, மாணவர்கள் தொலைதூரம் பயணிக்க வேண் டியநிலை இருந்தது. மாணவர் களின் நலன் கருதி, பள்ளியை தரம் உயர்த்த கல்வித் துறை முன் வந்தபோதும், அதற்கான இடவசதி இல்லாததால் அது சாத்திய மாகவில்லை.

advertisement by google

இந்நிலையில் இங்கு 1964-65-ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவி டாக்டர் பஞ்சரத்னா (75), தான் கல்வி பயின்று 50 ஆண்டுகள் ஆகிவிட்டதால், பள்ளியை கடந்த 2014-ல் எதேச்சையாக பார்க்க வந்துள்ளார். அப்போது கிராமப்புற சூழலையும், மேல்நிலைப் பள்ளிக் கான தேவையையும் அறிந்து கொண்டார். உடனே பள்ளிக்கு அடுத்துள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை ரூ.60 லட்சம் செலவில் வாங்கிக் கொடுத்ததோடு, பள்ளியை தரம் உயர்த்த ரொக்க மாக ரூ.2 லட்சத்தையும் கொடுத் துள்ளார்.

advertisement by google

முன்னாள் மாணவி டாக்டர் பஞ்சரத்னாவின் உதவியால் கடந்த 2014-ம் ஆண்டிலேயே மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது கள் ளப்பாளையம் அரசுப் பள்ளி. மேல்நிலைப் பள்ளியாகி 5 ஆண்டு கள் ஆன நிலையில் இதுவரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கு பயின்று பிளஸ் 2 தேர் வாகிச் சென்றுள்ளனர். இந்தப் பள்ளி தரம் உயர்ந்ததால் சுற்று வட்டார குழந்தைகளின் இடை நிற்றலும் குறைந்துபோனது. இதற் கெல்லாம் நன்றி செலுத்தும் விதமாக தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் பஞ்சரத்னாவை அழைத்து, பள்ளி சார்பில் அண்மையில் பாராட்டு விழா நடத்தினர். அதில், தனது கணவர் யோகி ஆனந்த் (80) உடன் கலந்து கொண்ட பஞ்சரத்னா, பள்ளியை பார்வையிட்டபிறகு, பள்ளியில் சிதிலமடைந்த கட்டிடங்களை புனரமைக்க மேலும் ரூ.10 லட் சத்தை வழங்கிச் சென்றுள்ளார்.

advertisement by google

காலத்துக்கும் மறவாத உதவி

advertisement by google

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.மணி மாலா கூறும்போது, “காலத்துக்கும் மறவாத உதவியை டாக்டர் பஞ்ச ரத்னா செய்துள்ளார்.

வயது முதிர்ந்த நிலையில் பஞ்சரத்னாவும், அவரது கணவரும் மிகுந்த சிரமத்துக்கிடையே அமெரிக்கா வில் இருந்து தனியாக கோவை வந்து, பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை” என்றார் நெகிழ்ச்சியுடன்.போராடிப் பெற்ற கல்வி

தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் டாக்டர் பஞ்சரத்னா ஆனந்த். குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றியவர். உடல்நலக்குறைவால் மருத்துவப் பணியை தொடர முடியாத நிலையிலும், தான் படித்த பள்ளிக்காக உதவி செய்துவரும், அவரை வாட்ஸ்அப்-ல் தொடர்புகொண்டு பேசினோம். “குழந்தைகளுக்கு உரிய காலத்தில் கல்வி கிடைக்க வேண்டும். அது கிடைக்காததால் ஏற்படும் வேதனையை நான் அறிவேன். பெண் குழந்தை என்பதால் 5-ம் வகுப்புக்கு பின்னர், என்னை மேற்கொண்டு படிக்க தந்தை அனுமதிக்கவில்லை. குடும்ப வறுமையும் வாட்டியது. வீட்டில் 10 குழந்தைகள் என்பதால், அம்மாவுக்கு துணையாக வீட்டு வேலைகளை செய்து வந்தேன். மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை.

6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, அடம் பிடித்து மீண்டும் பள்ளியில் சேர்ந்தேன். பள்ளிப் படிப்புக்குப் பிறகு, ஓவிய ஆசிரியராக ஆசைப்பட்டேன். இதையறிந்த அப்போதைய தலைமை ஆசிரியர் அப்துல் ஹமீது, ‘ஓவிய ஆசிரியராகி உன் திறமையை வீணடித்து விடாதே. அதைவிட உயர்ந்த நிலையை நீ அடைய வேண்டும்’ என்று அறிவுரை கூறி, மருத்துவப் படிப்பில் சேருமாறு வழிகாட்டினார். அவர் இல்லையென்றால் நான் மருத்துவராகி இருக்க மாட்டேன். படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அதையே தற்போது செய்துவருகிறேன்” என்றார் தழுதழுத்த குரலில்.

advertisement by google

Related Articles

Back to top button