இந்தியாஉலக செய்திகள்

உத்தரபிரதேச தேர்தல்தலில் சாமனியனின் மனநிலை என்ன?✍️முஸ்லிம்களின் மனநிலை யாருக்கு சாதகம்? ✍️மக்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்ன?✍️முழுவிவரம்✍️ விண்மீன்நியூஸ்✍️

advertisement by google

விண்மீண்தீ நியூஸ்:

advertisement by google

உத்தர பிரதேச தேர்தல்: முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு? மக்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்ன?

advertisement by google

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரங்களில் பாகிஸ்தான், ஜின்னா, தாலிபன் போன்ற வார்த்தைகள் அதிகம் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில்தான் நாட்டின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகையும் உள்ளது.

advertisement by google

உத்தர பிரதேசத்துக்கு பாகிஸ்தானுடன் நேரடித் தொடர்பு இல்லை. அந்த மாநிலம், பாகிஸ்தானுடன் தனது எல்லையை பகிரவில்லை. ஆனாலும் உத்தர பிரதேச தேர்தல் சூழலில் பாகிஸ்தானும் ஜின்னாவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

advertisement by google

சமீபத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது அறிக்கையில் பாகிஸ்தானின் நிறுவனர் மற்றும் இந்தியாவின் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டவருமான முகமது அலி ஜின்னாவைப் பற்றி முதலில் குறிப்பிட்டார்.

advertisement by google

இதற்குப் பிறகு ‘ஜின்னா’ அரசியல் பேச்சுகள் மற்றும் விவாதங்களின் மையப் புள்ளி ஆனார்.

advertisement by google

ஒரு பேட்டியின் போது, ‘எங்கள் முதல் எதிரி பாகிஸ்தான் அல்ல, பாரதிய ஜனதா கட்சிதான்,’ என அகிலேஷ் யாதவ் கூறியது, ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது.

advertisement by google

அகிலேஷ் யாதவின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, “ஜின்னாவை யார் நேசிக்கிறார்களோ, அவர் பாகிஸ்தானை எப்படி எதிர்க்க முடியும்” என்றார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அகிலேஷ் யாதவின் பேச்சை இலக்கு வைத்து, ”பாகிஸ்தானை எதிரியாக நினைக்காதவர்கள் ஜின்னாவை நண்பராகக் காண்கிறார்கள்” என்று கூறினார்.

இது மட்டுமின்றி, கடந்த புதன்கிழமை, உத்தர பிரதேசத்தில் ஜாட் சமூகத்தினரின் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உங்களுடனான எங்கள் உறவு 650 ஆண்டுகள் பழமையானது. நீங்களும் முகலாயர்களை எதிர்த்துப் போரிட்டீர்கள். நாங்களும் போராடுகிறோம்” என்று கூறினார்.

சமீபத்தில், முசாஃபர்நகர் பாஜக எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான விக்ரம் சிங் சைனி, ஒரு கிராமத்தில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பேசுகையில், “பாகிஸ்தானுக்குத் தைரியம் இருக்கிறதா? பாகிஸ்தானையும் அதற்கு ஆதரவாக இங்குள்ள துரோகிகளையும் அடிபணிய வைக்க விரும்பினால், தாமரைக்கு வாக்களியுங்கள்” என்று பேசியுள்ளார்.

ஆனால், சிறுபான்மையினருக்கு எதிராகக் கூறிய இந்த கருத்தையடுத்து, கிராம மக்கள் விக்ரம் சிங் சைனியை முற்றுகையிட்டனர். கடைசியில் அவர் மன்னிப்புக் கேட்டு விட்டு தப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாகிஸ்தான், ஜின்னா, முஸ்லிம்கள் – ஏன் சர்ச்சையாகின்றன?

பாகிஸ்தான், ஜின்னா, தாலிபன், முகலாயர் போன்ற வார்த்தைகள் வெறும் அரசியல் வாசகங்களுக்கு மட்டுமின்றி, டிவி சேனல்களின் விவாதங்களில் நிறைந்துள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் களத்தில் நிலவும் உண்மையான பிரச்னைகளை விட்டு திசை திரும்புவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹபீஸ் காந்தி, “வளர்ச்சி சார்ந்த அரசியலை செய்ய பாஜக தவறி விட்டது. மாநிலத்தில் வளர்ச்சியைக் கொண்டு வரத் தவறிவிட்டதால், அந்த கட்சி துருவமுனை அரசியல் செய்கிறது.” என்று குற்றம்சாட்டினார்.

இதை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக மறுக்கிறது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறுகையில், பாகிஸ்தான் மற்றும் ஜின்னாவின் பெயர்களை முதலில் எடுத்து விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் அகிலேஷ் யாதவ் தான் என்று கூறியுள்ளார்.

“சர்தார் படேலின் பிறந்த நாளில், நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் அகிலேஷ் யாதவ் எந்த காரணமுமின்றி, ஜின்னாவைப் புகழ்ந்து கொண்டிருந்தார்.”

“அகிலேஷ், பாகிஸ்தான் குறித்தும் ஜின்னா குறித்தும் அடிக்கடி பேசி வருகிறார். அவரது கட்சி எம்.பி யான ஷபிகுர் ரஹ்மான் பர்க், தாலிபன் அமைப்பை ‘விடுதலை இயக்கம்’ என்று கூறி வருகிறார். ஆனால், குற்றச்சாட்டை மட்டும் பாஜக மீது சுமத்துகின்றனர். அந்த கட்சியினரின் அறிக்கைக்கு மட்டுமே நாங்கள் எதிர்வினையாற்றுகிறோம். பாகிஸ்தான், ஜின்னா குறித்துத் தேர்தலில் பேசுவதால் யாருக்கு லாபம் என்பது இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது,” என்றார்.

இதற்குப் பதிலளித்த சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் அப்துல் ஹபீஸ் காந்தி, “சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் அறிக்கையைப் பொருத்த வரையில், டாக்டர் லோஹியாவின் அறிக்கை குறித்து அவர் பேசினார். அவரது பேச்சு திரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேட்டியில், சீனாவின் முதலீடு குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. காலம் சென்ற முப்படைத் தலைவர் பிபின் ராவத் கூட, இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் வடக்கு எல்லை அதாவது சீனா தான் என்று கூறியிருந்தார். சீனா தான் நமக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் என்று அவர் கூறினார். அகிலேஷ் யாதவும் இதேபோன்ற கருத்தைத் தான் தெரிவித்தார். அதை பாஜக பிரசாரத்துக்குப் பயன்படுத்துகிறது,”

என்று கூறினார்.

அதே நேரத்தில், உத்தர பிரதேச காங்கிரஸின் சிறுபான்மை விவகாரங்கள் தலைவர் ஷாநவாஸ் ஆலம், பாகிஸ்தானையும் ஜின்னாவையும் தேர்தலில் பயன்படுத்துவது பாஜக மட்டும் இல்லை என்று கூறுகிறார்.

இரு கை தட்டினால் தான் ஓசை. ஒரு தரப்பு மட்டும் செய்வதால் துருவமுனைப்பு ஏற்படாது. சமாஜ்வாதி கட்சிக்கும் இதனால் பலன் கிடைக்கும் என்று ஆலம் கூறுகிறார். ப்ரியங்கா காந்தியின் பொதுக்கூட்டம் நடைபெற்ற அன்று தான் அகிலேஷ் ஜின்னாவை ஒரு மதசார்பற்ற நல்ல மனிதர் என்று கூறினார். ஜின்னாவை நினைவிருந்த அவருக்குத் தனது கட்சியின் ஆசம்கானை நினைவில்லை” என்றார்.

“மக்கள் பிரச்னைகளிலிருந்து தேர்தலைத் திசை திருப்பி, துருவமுனைப்பை ஏற்படுத்தும் ஒரு முயற்சி தெளிவாகத் தெரிகிறது. இதை பாஜக மற்றும் சமாஜ்வாதி இரண்டும் செய்கின்றன. இந்த இரு கட்சிகளும் இருமுனைப் போட்டியாக இந்தத் தேர்தலை மாற்ற முயற்சிக்கின்றன. ஆனால், பாஜக மட்டுமே இதைச் செய்வதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது,” என்றார் ஆலம்.

சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தினமான அக்டோபர் 31ஆம் தேதி, ஹர்தோயில் அகிலேஷ் யாதவ் தனது உரையில் ஜின்னாவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

“சர்தார் படேல், இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ஜின்னா ஆகியோர் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்து பாரிஸ்டர்கள் ஆனவர்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள். எந்தப் போராட்டத்திலும் பின்வாங்கவில்லை. இரும்பு மனிதர் சர்தார் படேல் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைத் தடை செய்தார்.” என்றார் அவர்.

அகிலேஷ் யாதவ் தனது அறிக்கையில் ஜின்னாவின் பெயரை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். ஆனால் தற்போது இந்த வார்த்தை உ.பி தேர்தலில் தொடர்ந்து ஒலித்து வருகிறது.

இது குறித்து அரசியல் ஆய்வாளர் சுனில் யாதவ் கூறுகையில், “சுதந்திர இயக்கம் குறித்துப் பேசும் போது ஜின்னாவின் பெயரை அகிலேஷ் யாதவ் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அந்தச் சிறு விஷயத்தை இழுத்தடித்துப் பெரிதாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எப்படியாவது தேர்தலை மதவாத அடிப்படையில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தான் ஊடக விவாதங்களும் அரசியல் தலைவர்களின் உரைகளும்,” என்றார்.

பெரும்பாலான முஸ்லீம் தலைவர்கள் இந்த அறிக்கைகள் குறித்து மௌனம் காத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக முஸ்லிம் சமூகத்திடமிருந்து எந்த எதிர்ப்பும் எதிர்வினையும் இல்லை.

துருவமுனைப்பு அரசியலில் இருந்து முஸ்லிம்கள் முன்னேறி விட்டதாக மூத்த பத்திரிகையாளர் வாசிம் அக்ரம் தியாகி நம்புகிறார்.

“இந்தத் தேர்தலில் எந்த வகுப்புவாதப் பிரச்சனைகளுக்கும் உத்தரபிரதேச முஸ்லீம் முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்குகளை துருவப்படுத்துவது முஸ்லிம்கள் எதிர்வினையாற்றினால் மட்டுமே சாத்தியம் என்பதை அவர் புரிந்துகொண்டார். தற்சமயம் அகிலேஷ் யாதவ் இதைத் தொடங்கிவைத்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் புயலை அமைதியாகக் கடக்க விடுவது முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியமாகிறது,” என்கிறார் தியாகி.

ஆனால் மதவாத விவாதங்கள் இரவு பகலாக நடைபெறும் நிலையில், அது பொதுமக்களிடம் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தாதா?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த சுனில் யாதவ், “இந்தத் தேர்தலில் மக்கள் மதத்தை விட முக்கியப் பிரச்சனைகளை முன்னிறுத்துவது போல் தெரிகிறது. ஜாதிகளின் கூட்டணியும் வலுவடைவது போல் தெரிகிறது. கடந்த தேர்தலில் சாதிகளின் கூட்டணியில் பா.ஜ., வெற்றி பெற்றது. அகிலேஷ் யாதவ் அதை இப்போது தனக்குச் சாதகமாகச் செய்ய முயற்சிக்கிறார். சாதி சமன்பாடுகளில் அல்லது பிரச்சினைகளில் நாம் பின்தங்கியிருந்தால், மதத் துருவமுனைப்பு மூலம் அதை ஈடுகட்ட முடியும் என்று ஆளும் கட்சி நினைத்திருக்க வேண்டும்.” என்று கூறுகிறார்.

மறுபுறம், காங்கிரஸை சேர்ந்த ஷாநவாஸ் ஆலம், “அரசியல் கட்சிகள் இதைச் செய்ய முயற்சிக்கின்றன, சமூகத்தின் ஒரு பகுதியும் பாதிக்கப்படுகிறது, ஊடகங்களும் அவர்களுக்கு அதிக இடம் கொடுக்கின்றன. இதுபோன்ற அறிக்கைகள் பொதுமக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் பெரும்பாலான மக்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என்று நாங்கள் உணர்கிறோம்.” என்கிறார்.

கொரோனா பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் போராட்டம் – இவை விவாதிக்கப்பட்ட சில விஷயங்கள். அப்படியானால் துருவமுனைப்பு அரசியல் மக்களின் பிரச்சினைகளை நசுக்கிவிட்டதா?

சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் காந்தி கூறுகையில், “மின் கட்டண உயர்வு பற்றியோ, வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியோ, சாலைகளின் மோசமான நிலை பற்றியோ பேச பாஜக விரும்பவில்லை. பெண்கள் ஒடுக்குமுறை பற்றி பேச விரும்பவில்லை. பிஜேபிக்குப் பேச எந்த விவகாரமும் கிடைக்கவில்லை. அனால்தான் மதப் பிரிவினை வாதத்தைக் கையிலெடுக்கிறது.” என்கிறார்.

இந்த

க் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, “ஜின்னாவின் பெயரை அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டால், நாங்கள் அமைதியாக இருப்போமா, அவருக்குப் பதிலளிப்போம். அவர் தாலிபன்களை இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் ஒப்பிடுவார், நாங்கள் எதிர்வினையாற்றக் கூடாதா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும் தொடரும் திரிபாதி, “வளர்ச்சிப் பிரச்சினைகளைச் சீர்குலைக்க பாகிஸ்தான் மற்றும் ஜின்னாவைப் பற்றிப் பேசுகிறார்கள் சமாஜ்வாதியினர். பாஜக ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் கல்லறைகளின் எல்லைச் சுவர்களைக் கட்டியது, ஆனால் அதற்கு மேல் வேலை தொடரவில்லை. இதை நாங்கள் கேட்கக்கூடாதா?”

பாஜகவின் வாதம் வளர்ச்சி குறித்தது தானேயன்றிப் பிரிவினைவாதமில்லை. என்று திரிபாதி கூறுகிறார். மின்சாரம், சாலை, சுகாதாரம், கல்வி என எங்களிடம் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த வேண்டும் என்று சவால் விடுகிறோம். ஒவ்வொரு அடிப்படைப் பிரச்னையிலும் விவாதம் நடத்த விரும்புகிறோம். அப்போது, சமாஜ்வாதியின் சாயம் வெளுத்துவிடும். ஏனெனில் வித்தியாசத்தை நாம் தெளிவாகக் காட்டுகிறோம்.” என்று அவர் விளக்குகிறார்.

பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த திரிபாதி, “சிறுபான்மையினருக்கு எதிராக எங்களுக்கு எந்தப் பாகுபாடும் இல்லை என்பதை புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்க முடியும். எங்கள் ஆட்சிக் காலத்தில் 43 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டன. இதில் 27 சதவீதம் பேர் முஸ்லிம்கள். அவர்களின் மக்கள்தொகை விகிதாச்சாரத்தை விட இது அதிகம். திட்டங்களின் பலன்களை வழங்குவதில் முஸ்லிம்களுக்கு அவர்களின் மக்கள் தொகை விகிதத்தை விட அதிக பங்கை வழங்கியுள்ளோம்.” என்றும் கூறுகிறார்.

ஆனால் உ.பி.யில் உள்ள முஸ்லிம்கள் பாஜக பக்கம் நாட்டம் காட்டவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பாஜக கூட்டணியும் இதுவரை ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கியுள்ளது. இந்தச் சூழல் முஸ்லிம்களை சமாஜ்வாதி கட்சியை நோக்கித் தள்ளிவிட்டது என்று வாசிம் அக்ரம் தியாகி கருதுகிறார்.

“80:20 என்ற முழக்கத்தை எழுப்பி முஸ்லிம்களை மீண்டும் சமாஜ்வாதி கட்சிக்குத் தள்ளுவதில் பாரதிய ஜனதாவும் பங்கு வகிக்கிறது. அகிலேஷ் யாதவ் மட்டும் தவறுகள் செய்யவில்லை. பாரதிய ஜனதா கட்சி சார்பாகவும் மிகப்பெரிய தவறுகள் உள்ளன” என்கிறார் அவர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button