தமிழிசையை விமர்சித்த இளைஞர் கைது!
Saturday, 14 Mar, 9.25 pm
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சித்த மன்னார்குடியை சேர்ந்த சாதிக் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது கோமாளித்தனமாக பதிவிட்டு பிரபலமானவர் மன்னை சாதிக். இவர் தமிழக முன்னாள் பாஜக தலைவரும், தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் புகைப்படத்துடன் சர்ச்சைக்குரிய வகையிலும் நாகரீகமற்ற வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் சாதிக். அத்துடன் தன்னை ஒரு பிரபலம்போல சித்தரித்தும் வந்துள்ளார். இதனால் சாதிக்கிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.கோமாளி, களவாணி, நட்பே துணை ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்த இவர், டிக்டாக்கில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இதுதொடர்பாக மன்னார்குடி பாஜக நகரச் செயலாளர் ரகுராமன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சாதிக் பாஷாவை கைது செய்த காவல்துறையினர், மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.