இந்தியா

கழுத்தில் காயத்துடன் வெறியுடன் ஊர்சுற்றும் புலி; கேமராவில் பதிவான காட்சி,ஊர் மக்களை எச்சரிக்கும் நீலகிரி மற்றும் வயநாடு வனத்துறை!✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கேமராவில் பதிவான கழுத்தில் காயத்துடன் சுற்றும் புலி; ஊர் மக்களை எச்சரிக்கும் வயநாடு வனத்துறை!

advertisement by google

நீலகிரி மாவட்டம் தமிழக எல்லையில் அமைந்திருக்கும் கேரள மாநிலத்தின் வயநாடு குருக்கன் மூலா சுற்றுவட்டாரப் பகுதிகளில் புலி ஒன்று கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 15-க்கும் அதிகமான கால்நடைகளை தாக்கியிருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மனிதர்களை தாக்கும் அபாயம் இருப்பதால், அந்த புலியை கண்காணிக்கும் பணியில் கேரள வனத்துறையினர் களமிறங்கியுள்ளனர்.

advertisement by google

அந்த புலியின் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். மேலும் 5 இடங்களில் ரகசியமாக கூண்டுகளையும் பொறுத்தி கண்காணித்து வருகின்றனர். கூண்டு பொருத்தப்பட்டிருக்கும் பகுதிகளை அந்த புலி தவிர்த்துச் செல்வதால், புலியை கண்டறிய இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து கும்கிகளின் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

advertisement by google

இந்த நிலையில், கேரள வனத்துறையினர் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா ஒன்றில் குறிப்பிட்ட அந்த புலியின் உருவம் பதிவாகியுள்ளது. மேலும் அந்த புலியின் கழுத்தில் கடுமையான காயம் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாகவே வன விலங்குகளை வேட்டையாட முடியாத அந்த புலி கால்நடைகளை தாக்கி வருவதையும் உறுதி செய்துள்ளனர்.

advertisement by google

காயப்பட்ட புலி குறித்து பேசிய கேரள வனத்துறையினர், “முதல் முறையாக கேமராவில் பதிவாகியுள்ள இந்த புலியின் வரிகளை அடிப்படையாகக் கொண்டு வயது பாலினம் போன்றவற்றை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் அந்த புலியின் குழுத்தைச் சுற்றி ஆழமான காயம் இருக்கிறது. சட்டவிரோத வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் சிக்கி தப்பியதால் இந்த காயம் ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் காயம் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். உள்ளூர் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கி வருகிறோம்” என்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button