இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

இரண்டு லாரிகளுக்கிடையே சிக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி – அப்பகுதியில் வேகத்தை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோரம்பள்ளத்தில் 2 லாரிகளுக்கிடையே சிக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி – அப்பகுதியில் வேகத்தை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

advertisement by google

காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது :-

advertisement by google

திசையன்விளை அருகே கடாக்குளத்தை சேர்ந்தவர் அந்தோணிமுத்து மகன் ஞாணசேகர்(40). இவரும் சிலரும் கோரம்பள்ளம் அருகே ஸ்ரீநகரில் தங்கியிருந்து சாலை சர்வே பணியில் ஈடுபட்டு வந்தனர்.

advertisement by google

இன்று மாலை வேலை முடிந்து இரவில் கோரம்பள்ளம் மெயின் ரோட்டிற்கு ஞாணசேகரும் மேலும் சிலரும் வந்தனர். இரவு சாப்பாடு வாங்கி கொண்டு கிளம்பும் போது ஞாணசேகர், தன்னுடைய மோட்டார் பைக்கிற்கு பெட்ரோல் வாங்க வேண்டும் என்றாராம். மற்றவர்கள் அந்த பகுதியில் நின்று கொள்ள ஞாணசேகர் மட்டும் பெட்ரோல் பங்கிற்கு செல்ல சாலையை கடக்க முற்பட்டார்

advertisement by google

அப்போது அந்த பகுதியில் உள்ள லாரி செட்டிலிருந்து தூத்துக்குடி நோக்கி கிளம்பி வந்த ஆந்திர மாநில லாரி, ஞாணசேகரை தட்டிவிட்டதில் அவர் தள்ளாடி கீழே விழ, எதிர் திசையிலிருந்து நெல்லை நோக்கி சென்ற லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே ஞாணசேகர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

advertisement by google

தகவல் அறிந்து அங்கு வந்த ஹைவே பெட்ரோல் போலீஸ் மற்றும் புதுக்கோட்டை காவல்நிலைய போலீஸார், ஞாணசேகரன் உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

advertisement by google

அப்போது அங்கு கூடிய பொதுமக்கள்ர், ‘தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் அடிக்கடி இந்த சாலையை கடக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிற பகுதி இது. எனவே இந்த பகுதியில் வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

advertisement by google

இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button