இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு

advertisement by google

[9/30, 9:28 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

advertisement by google

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி வரவேற்றனர்

advertisement by google

2வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக சென்னை வந்துள்ளார் மோடி
[9/30, 9:29 AM] விண்மீண்நியூஸ்2: ?% பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்திற்கு ஆளுநர் & முதல்வர் வருகை

advertisement by google


[9/30, 9:29 AM] விண்மீண்நியூஸ்

advertisement by google

சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தடைந்தார்

advertisement by google

சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழாவும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் இன்று நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து காலை 9 மணியளவில் சென்னை வரும் பிரதமர், ஹெலிகாப்டர் மூலம் ஐ.ஐ.டி. வளாகத்துக்கு செல்கிறார். ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஹேக்கத்தான் தொழில்நுட்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசு வழங்கி கவுரவிக்கிறார்.மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், சிங்கப்பூர் கல்வியமைச்சர் ஒங்க் யெ குங் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, புதிதாக தொழில் தொடங்குவோருக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் பிரதமர் பார்வையிடுகிறார்.முற்பகல் 11.40 மணிக்கு மாணவர்கள் செயல்பாட்டு அரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.இதனிடையே, பட்டமளிப்பு விழா உரைக்கு யோசனை தெரிவிக்குமாறு ஐஐடி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நமோ செயலியில் மாணவர்கள் தங்கள் யோசனைகளை, பகிரும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம், ஐ.ஐ.டி. வளாகம் ஆகிய இடங்களில் கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டதுடன், விடிய விடிய ரோந்துப் பணியும் முடுக்கிவிடப்பட்டிருந்தது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button