தொழில்நுட்பம்

நவம்பர் 2021 முதல் இந்த மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது!✍️ வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

நவம்பர் 2021 முதல் இந்த மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது!
தொழில்நுட்பத்துறை மிகப் பெரிதாக வளர்ந்து விட்ட நிலையில் பழைய OS பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களிலும், ஆப்பிள் ஐபோன்களிலும் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.
நவம்பர் 2021 முதல் இந்த மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது!
வாட்ஸ்அப்
TRENDING DESK
LAST UPDATED: OCTOBER 25, 2021, 18:34 IST
Digital Desk*

advertisement by google

2021ம் ஆண்டு முடிவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. ஏற்கனவே வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது போல இந்த ஆண்டின் முடிவில், வாட்ஸ்அப்பின் மற்றொரு சப்போர்ட் சுழற்சியும் முடிவடைகிறது. ஒரு சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் ஐபோன்களிலும் வாட்ஸ்அப் இனி வேலை செய்யாது என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. எந்த மாடல் போன்களில் எல்லாம் வரும் நவம்பர் 1, 2021 முதல் வாட்ஸ்அப் செயலி சப்போர்ட் ஆகாது என்பதற்கான நீண்ட பட்டியலை வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

advertisement by google

தொழில்நுட்பத்துறை மிகப் பெரிதாக வளர்ந்து விட்ட நிலையில் பழைய OS பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களிலும், ஆப்பிள் ஐபோன்களிலும் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. ஆண்ட்ராய்டு போன்களில் ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் குறைவான ஓஎஸ் வெர்ஷன் பயன்படுத்தும் மாடல்களிலும், ஆப்பிள் ஐபோன்களில் ஐஓஎஸ் 9 அல்லது அதற்கும் குறைவான ஐஓஎஸ் பயன்படுத்தும் மாடல்களிலும் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.

advertisement by google

நவம்பர் 1 முதல் வாட்ஸ்ஆப் சப்போர்ட் ஆகாத ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களில் பட்டியல் இங்கே.

advertisement by google

ஐபோன்:

advertisement by google

iPhone 4s மற்றும் அதற்கும் முந்தைய வெர்ஷன்கள் கொண்ட சாதனங்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது.

advertisement by google

ஆண்டிராய்டு சாதனங்கள்:

advertisement by google

ஆண்டிராய்டு OS கொண்ட ஸ்மார்ட்போன்களில், சாம்சங், எல்.ஜி, ஹூவாய், சோனி மற்றும் பிற பிராண்டு ஃபோன்களில், நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்பொன் கீழே வழங்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்தால், உங்களால் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது.

377
சாம்சங்:

சாம்சங் பிராண்டு மொபைல் போன்களில், ஸாம்சங் கேலக்சி டிரெண்ட் லைட், கேலக்சி டிரெண்ட் II, கேலக்சி SII, கேலக்சி S3 mini, கேலக்சி Xcover 2, கேலக்சி Core மற்றும் கேலக்சி Ace 2 ஆகியவை வாட்ஸ்அப் ஆப்பை சப்போர்ட் செய்யாத ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

எல்ஜி:

பின்வரும் LG ஸ்மார்ட்போன்களில் உங்களால் வாட்சப்பைப் பயன்படுத்த முடியாது – LG Lucid 2, ஆப்டிமஸ் F7, ஆப்டிமஸ் F5, ஆப்டிமஸ் L3 II Dual, ஆப்டிமஸ் F5, ஆப்டிமஸ் L5, ஆப்டிமஸ் L5 II, ஆப்டிமஸ் L5 Dual, ஆப்டிமஸ் L3 II, ஆப்டிமஸ் L7, ஆப்டிமஸ் L7 II Dual, ஆப்டிமஸ் L7 II, ஆப்டிமஸ் F6, Enact, ஆப்டிமஸ் L4 II Dual, ஆப்டிமஸ் F3, ஆப்டிமஸ் L4 II, ஆப்டிமஸ் L2 II, ஆப்டிமஸ் Nitro HD மற்றும் 4X HD, மற்றும் ஆப்டிமஸ் F3Q.

ZTE:

ZTE Grand S Flex, ZTE V956, Grand X Quad V987 மற்றும் Grand Memo ஆகிய ZTE சாதனங்களை நீங்கள் தற்போது பயன்படுத்தினால், உங்களால் வாட்சப் பயன்படுத்த முடியாது.

Also read… ‘PhonePe’ ஆப்பில் ரீசார்ஜ் செய்தால் இனி கூடுதல் கட்டணம்...

ஹூவாய்:

ஹூவாய் ஸ்மார்ட்போன்களான, ஹூவாய் அஸ்செண்ட் G740, அஸ்செண்ட் Mate, அஸ்செண்ட் D Quad XL, அஸ்செண்ட் D1 Quad XL, அஸ்செண்ட் P1 S, மற்றும் அஸ்செண்ட் D2 ஆகிய மாடல்களில் நீங்கள் பயன்படுத்தும் ஓஎஸ் வெர்ஷனை மேம்படுத்தினால், வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

சோனி:

Sony Xperia Miro, Sony Xperia Neo L மற்றும் Xperia Arc S ஆகிய Sony Xperia ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இனி சப்போர்ட் ஆகாது.

மற்ற பிராண்டு சாதனங்கள்:

வாட்ஸ்அப் உடன் பொருந்தாத பிற ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன்களில் HTC Desire 500, அல்காடெல் One Touch Evo 7, Archos 53 Platinum, Caterpillar Cat B15, Wiko Cink Five, Wiko Darknight, Lenovo A820 உள்ளிட்டவை அடங்கும்.

2011ம் ஆண்டு ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லிபீன் அறிமுகமானது. இதற்கு முன்னர் வெளியான எந்த ஆண்ட்ராய்டு வருடங்களிலும் நீங்கள் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. எனவே உங்கள் போனை அப்டேட் செய்வதற்கான சரியான நேரம் இது.✳️✳️

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button