இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் திட்டம்- உடுமலைK.ராதாகிருஷ்ணன் பரபரப்பு

advertisement by google

திருப்பூர் : கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் துவங்கப்படவுள்ளதாகவும் அதன் மூலம் மருத்துவர்கள் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவம் அளிப்பார்கள் என திருப்பூரில் கால்நடை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

advertisement by google

திருப்பூரில் தமிழக போக்குவரத்துத் துறை மூலம் 2.6 கோடி மதிப்பீட்டிலான 7 பேருந்துகள் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி , கோவை ஆகிய ஊர்களுக்குச் செல்லும் வகையில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்காக பழைய பேருந்து நிலையம், கோவில் வழி பகுதிக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தீபாவளிக்காக 300 பேருந்துகள் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கோமாரி நோய்க்காக கடந்த முறை மருந்துகள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதன் மூலம் இந்தாண்டு மருந்துகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் , விரைவில் அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் துவங்கப்படும் எனவும் அதன் மூலம் மருத்துவர்கள் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று மருந்துகள் வழங்குவர் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் , மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button