இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்தி

ராமர் கோவில் கட்ட இழுத்தடிக்கும் பாஜக ? விரைவாக கோவில்கட்டிவிட்டால் அரசியல் செய்ய முடியாதோ?

advertisement by google

ராமர் கோவில் கட்ட இழுத்தடிக்கும் பாஜக – கோவில் கட்டி விட்டால் ராமரை வைத்து இனி அரசியல் செய்ய முடியாதோ?

advertisement by google

ராமர் பெயரில் பல பெயர்களில் வசூல் வேட்டை மறுபுறம்!

advertisement by google

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கரசேவை என்ற பெயரில் இடிக்கப் பட்ட நிலையில், நீண்டகால வழக்கு விசாரணைக்குப் பின் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உத்தர விட்டது உச்சநீதிமன்றம். மத்திய அரசு அதற்கான குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு மாநிலத் தேர்தல்களில் கவனம் செலுத்தி வருவதால் ராமர் கோயில் பற்றி நினைக்கவில்லை. அதாவது ராமருக்கு கோயில் கட்டிவிட்டால், அதன் பிறகு இந்தியாவில் ராமரை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதால் கோயில் கட்டும் பணியில் சுணக்கம் காட்டிவருவதாக, காவி கட்டிய பக்தர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

advertisement by google

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ராமர் கோயில் கட்ட நிதி வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகளும், கரசேவை புரத்தில் முகாமிட்டு வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வசூலுக்கு வரவு-செலவு கணக்குகளே இல்லை. இந்த நிலையில் தான், “ராமர் கோயில் கட்டுமானப் பணிக்குழுவில் அமித்ஷாவையும், ஆதித்யநாத்தையும் சேர்க்க வேண்டும்’ என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லிவருகிறது. “கரசேவைக்காக அமித்ஷா போன்றவர்கள் என்ன செய்தார்கள்? ஏன் அவர்களை சேர்க்க வேண்டும். இதுவரை ராமர் பெயரை வைத்து அரசியல் செய்தது போதும். இதன் பிறகாவது அரசியல் செய்வதை விட வேண்டும்’ என்றும் காவிகள் பலமாக குரல் உயர்த்தி வருகின்றனர்.

advertisement by google

பட்டுக்கோட்டையில் இருந்து அயோத்திக்கு செங்கல் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்துள்ள அகில பாரத ஸ்ரீராம் சேனா தேசிய பொதுச்செயலாளர் ஆதி மதனகோபாலை சந்தித்தோம்…
“சுப்பிரமணியசுவாமி தனது பிறந்த நாளை அயோத்தியில் நித்திய கோபால் தாஸ் தலைமையில் கொண்டாடினார். அப்போது, “நவம்பரில் தீர்ப்பு வரும். அந்த தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும்’ என்று சொன்னார். ஏனென்றால் அவரும் இந்த வழக்கில் இணைந்து வழக்கை துரிதமாக கொண்டுவந்தவர். அவர் சொன்னபடியே நடந்துவிட்டது. அதனால்தான் அவர் சொன்னதை நம்பி செங்கல் பூஜை செய்துகொண்டு போனோம்.

advertisement by google

அங்கே போய் ரயிலை விட்டு இறங்கியதும், எங்களை பாதுகாப்பாக போலீசார் கரசேவைபுரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே நாங்கள் கொண்டு சென்ற செங்கற்களை ஒப்படைத்தோம். அங்கே கண்ட இடத்திலும் ரசீது புத்தகம் வைத்துக்கொண்டு, ரசீது இல்லாமலும், உண்டியல் வைத்துக்கொண்டும் “ராமர் கோயில் கட்ட நிதி கொடுங்கள்’ என்று வசூல்வேட்டை நடந்துகொண்டிருக்கிறது. அதைப் பற்றிக் கேட்டால், “20 வருடங்களுக்கு மேலாக இப்படி ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வசூல் செய்து வருகின்றன என்றும் அதற்கு இதுவரை கணக்கே காட்டவில்லை’ என்றும் சொல்கிறார்கள். ஆனால், இப்ப ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் “பண மில்லை நிதி கொடுங்கள்’ என்று கேட்கிறார்கள். இதைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button