இந்தியா

இந்தியாவில் 75% இளைஞர்கள் குடிகாரர்கள்

advertisement by google

♦இந்தியாவில் 75% இளைஞர்கள் குடிகாரர்கள்- அதிர்ச்சி தகவல்

advertisement by google

?இந்தியாவில் 21 வயதை தொடுவதற்குள் 75 சதவீத இளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

advertisement by google

?தென் மும்பை தோபிதலாவில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள், அந்த கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் டாக்டர் அவ்கேஷ் ஜாதவ் வழிகாட்டுதலின் பேரில் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

advertisement by google

?மும்பை, டெல்லி, கொல்கத்தா நகரங்களிலும் ராஜஸ்தான் மாநிலத்திலும் மட்டுமல்லாது செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராகுவே, ஹங்கேரி நாட்டு இளைஞர்களிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

advertisement by google

?16 முதல் 21 வயதுக்குட்பட்ட சுமார் 1,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 21 வயதை தொடுவதற்கு முன்பாகவே மது அருந்த தொடங்கியதாக 75 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

advertisement by google

?47 சதவீதம் பேர் 21 வயதுக்கு முன்பாகவே சிகரெட் புகைக்கும் பழக்கத்துக்கு ஆளானதாகவும், 20 சதவீம் பேர் வேறு சில போதை மருந்து எடுத்துக் கொள்ள முயன்றதாகவும், 30 சதவீதம் பேர் ஹூக்கா புகைத்ததாகவும் தெரிவித்தனர்.

advertisement by google

?16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 88 சதவீதம் பேர் வேறு வகையான சில போதை பொருட்களை பயன்படுத்த முயற்சித்ததாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

advertisement by google

?ஒருவிதமான எதிர்பார்ப்பு, மன அழுத்தம் போதை பொருள்கள் எளிதாக கிடைப்பது போன்ற காரணங்களால்,  மது உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு இளைஞர்கள் ஆளாகி விடுவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

?இது குறித்து டாக்டர் அவ்தேஷ் ஜாதவ் கூறுகையில், ‘‘இன்றைய இளைஞர்கள் பல்வேறு பாதிப்புகளை அன்றாட வாழ்வில் சந்திக்கிறார்கள். இது அவர்களை போதை பழக்கத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறது.

?இளைஞர்களிடம் உள்ள ஆரோக்கியமற்ற பழக்கத்தை கண்டறியவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது,’’ என்றார்.

advertisement by google

Related Articles

Back to top button