பதவிக்காக ஆளுங்கட்சியாக பார்த்து அணி மாறும் நடிகை குஷ்பூ, தமிழக திமுக அரசை எப்போழுதும் போல எழுதி வாங்கி சாடல்,✍️தேனிலவு தம்பதிகளாக திமுக அரசு?.. குஷ்பூ பரபரப்பு பேச்சு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தேனிலவு தம்பதிகளாக திமுக அரசு?.. குஷ்பூ பரபரப்பு பேச்சு.!
பாஜக குஷ்பூ செய்தியாளர்களை சந்திக்கையில், ” கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜூம் செயலி வழியாக மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வருகிறோம். திமுக தற்போது தான் ஆட்சி அமைந்துள்ளது. புதிய திருமணம் செய்யும் தம்பதிகள் முதல் 3 மாதம் தேனிலவு காலமாக நினைத்து எதுவும் சொல்ல மாட்டோம். இதனைப்போல தான் கட்சிகளும், அதன் ஆட்சி வருகையும்.
திமுக ஆட்சிக்கு வந்துள்ளது தேனிலவு போலத்தான். தற்போது அவர்களை விமர்சிப்பது சரியாக இருக்கிறது. கடந்த மே மாதம் ஊரடங்குகளில் எடப்பாடி பழனிச்சாமி மதுக்கடைகளை திறந்ததற்கு மு.க ஸ்டாலின் போராட்டம் நடத்தினர், விமர்சனம் செய்து கார்ட்டூன் வெளியிட்டார். அதெல்லாம் மறந்து போகுமா?.
ஒன்றிய அரசு வாதம் என்பது தற்போது தேவையில்லாதது. காங்கிரஸ் ஆட்சியில் 10 வருடம் மத்திய மாதிரியாக திமுகவினர் இருந்து வந்தார்கள். அப்போது ஒன்றியத்தை உயர்த்தி பேசியிருக்கலாம்?. கொரோனாவால் உலகமே சிக்கி தவிக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு போராடி வருகிறது.
கொரோனா தொற்று ஏற்பட்ட ஒரு வருடத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்து உலக நாடுகளை பிரதமர் மோடி திரும்பி பார்க்க வைத்தார். தடுப்பூசியால் உத்திரவாதம் இல்லை என்று முதலில் மக்களிடையே பீதியை கிளப்பியவர்கள், இன்று கொரோனா கொரோனாவை வெல்ல தடுப்பூசி தான் ஆயுதம் என்று கூறுகிறார்கள்.
கோவில்களில் பெண்கள் அட்சகராக நியமனம் செய்யப்படும் திட்டம் புதியது போல பேசுகிறார்கள். ஏற்கனவே பெண்கள் பூஜை செய்யும் பல கோவில்கள் உள்ளது. தேனிலவு காலத்தில் கொஞ்ச நாட்கள் அப்படி, இப்படித்தான் இருப்பார்கள். 3 மாதம் ஆகட்டும் ” என்று தெரிவித்தார்.