கல்விபயனுள்ள தகவல்விவசாயம்

மல்லிகைக்கு வேரில் இடவேண்டிய உரம் எது✍️மண்புழு உரம் உற்பத்தியின் போது நாம் கவனிக்க வேண்டியது என்ன✍️பீஜாமிர்தக் கரைசல் எப்படி தயாரிப்பது✍️கறவை மாடுகளை எந்த வயதில் பண்ணையில் இருந்து நீக்கம் செய்தல் நன்று✍️விண்மீன்நியூஸின் விவசாய கேள்வி – பதில்கள்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

மல்லிகைக்கு வேரில் இடவேண்டிய உரம் எது..??

advertisement by google

விண்மீன்நியூஸின் விவசாய கேள்வி – பதில்கள்…!
27.1.2021

advertisement by google

மண்புழு உரம் உற்பத்தியின் போது நாம் கவனிக்க வேண்டியது என்ன?

advertisement by google

? மண்புழு உரம் உற்பத்திக்கு நிழலுடன் அதிகளவு ஈரப்பதம் உள்ள குளிர்ச்சியான பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

advertisement by google

? திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால், நிழலான இடத்தையும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பதற்கு, தென்னைக்கீற்றை கூரையாகவும் பயன்படுத்தலாம்.

advertisement by google

❓மல்லிகை நடவு செய்யும் பொழுது என்ன உரம் இட வேண்டும்?

advertisement by google

? மல்லிகை நடும்பொழுது ஒரு குழிக்கு 5 கிலோ தொழு உரம், 500 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 100 கிராம் மண்புழு உரம் என்ற அளவில் இட்டு நடவு செய்ய வேண்டும்.

? உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம், பொட்டாஷ் பாக்டீரியா மற்றும் வேம் ஆகியவற்றை தொழுஉரத்துடன் கலந்து, மாதம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி பின் வேரில் இடலாம்.

❓இயற்கை இடுபொருட்களின் முக்கியத்துவம் என்ன?

? கரிம வேளாண்மையில் இயற்கை இடுபொருட்களின் பயன்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம் பண்ணை உரத்துக்கான நடைமுறைச் செலவு பேரளவு குறைகிறது.

? மேலும் இயற்கை திறன்மிகு இடுபொருட்களைப் பண்ணையிலிருந்தே பெற்று சுயதேவையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். மேலும் பயிரின் வளர்ச்சி, மகசூல் ஆகியவை அதிகரிக்கும்.

❓பீஜாமிர்தக் கரைசல் எப்படி தயாரிப்பது?

? தண்ணீர் 20 லிட்டர், பசுமாட்டுச் சாணம் 5 கிலோ, ஒரு கைப்பிடி அளவு நுண்ணுயிர் அதிகமுள்ள வளமான மண், நாட்டு பசு மாட்டுக்கோமியம் – 5 லிட்டர், சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் ஆகியவற்றை (சாணம் தவிர) ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு சாணத்தை மட்டும் ஒரு சாக்கு அல்லது துணியில் போட்டு ஒரு குச்சியில் கட்டி நீரில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக மிதக்க விட வேண்டும்.

? பிறகு சாக்கிலுள்ள மாட்டுச்சாணத்தைப் பிழிந்து சாற்றை மட்டும் கலவையில் சேர்க்க வேண்டும். கழிவை அகற்றிவிட வேண்டும். இந்த கலவையைப் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக தெளிக்கலாம்.

❓கறவை மாடுகளை எந்த வயதில் பண்ணையில் இருந்து நீக்கம் செய்தல் நன்று ?

? கறவை மாடுகளில் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு பிறகு பால் உற்பத்தி அளவு குறைய தொடங்கும் என்பதால், 10 ஆண்டுகளுக்கு பிறகு அவற்றை பண்ணையிலிருந்து நீக்கம் செய்வது நல்லது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button