இந்தியா

ஒரே அடையாளமின்னணுகார்டில்குற்றபின்னணி குறித்த தகவல்கள் அமித்ஷா அதிரடி

advertisement by google

ஆதார், பான், டிரைவிங் லைசென்சை இணைத்து அனைத்துக்கும் ஒரே அடையாள அட்டை: முதன் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு

advertisement by google

ஒரே ரேஷன், ஒரே தேர்வு, ஒரே மொழி வரிசையில், ஒரே நாடு – ஒரே அடையாள அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த அடையாள அட்டையில், ஆதார், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் எண்கள் இணைக்கப்படுவதுடன், ஒரே எண் தரப்பட்டு, மின்னணு கார்டில் குற்றப்பின்னணி குறித்த தகவல்களும் இருக்கும் என்று அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2021ம் ஆண்டு நடைபெறும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளும் பொதுப் பதிவாளர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.

advertisement by google

இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:மக்கள்தொகை கணக்கெடுப்பானது, வரும் 2021ம் ஆண்டில் முதல் முறையாக காகித முறையில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்த போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பிறப்பு, இறப்பு தொடர்பான தகவல்கள் சரியான முறையில் தானாகவே சேகரிக்கப்படும். 16 மொழிகளில் எடுக்கப்பட இருக்கும் தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது.

advertisement by google

டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுவதன் மூலம், பல்நோக்கு அடையாள அட்டையை கொண்டு வர முடியும். தற்போது ஒவ்வொருவரிடமும் பல்வேறு அடையாள அட்டைகள் உள்ளன. டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம், ஒவ்வொரு தனிநபரின் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பயன்படும் ஆவணங்கள் அனைத்தும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்படும் என்பதால், அதன் மூலம் பல்நோக்கு அடையாள அட்டையை ஏற்படுத்த முடியும். தனிநபரின் குற்ற நடவடிக்கைகள், அரசின் நலத்திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்துதல் உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தேசிய மக்கள்தொகை பதிவேடு அவ்வப்போது மேம்படுத்தப்படும். இதன் மூலம் ஒருவரின் பயோமெட்ரிக் மற்றும் அவர் நாட்டின் எந்த மூலையில் வசிக்கிறார் என்ற விவரங்கள் இணைக்கப்படும்.

advertisement by google

வரும் 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பனிப்பிரதேசங்களில் நடப்பாண்டு அக்டோபர் 1ம் தேதி கணக்கெடுப்பு தொடங்கும். பிற பகுதிகளில் அடுத்தாண்டு மார்ச் 1ம் தேதி கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது. நாட்டில் உள்ள 130 கோடி மக்களையும் இதன் பயன்கள் குறித்த தகவல்கள் சென்றடைய வேண்டும். அப்போதுதான் எதிர்கால திட்டங்கள், முன்னேற்ற நடவடிக்கைகள், அரசின் நலத்திட்டங்கள், நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றில் மக்கள்தொகை கணக்கெடுப்பு எந்தளவு முக்கிய பங்காற்றுகிறது என்பது மக்களுக்கு தெரிய வரும்.

advertisement by google

மேலும் இதன் மூலம் மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதி, முனிசிபல் வார்டு என எல்லைகளை நிர்ணயிக்கும் முறை முடிவுக்கு கொண்டு வரப்படும். எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி புண்ணியம் சேர்த்து கொள்ள வேண்டும். உலக மக்கள்தொகையில் இந்தியாவில் 17.5 சதவீதம் உள்ளது. அதே சமயம் உலக புவியியல் அமைப்பில் 2.4 சதவீதம் மட்டுமே இந்தியாவில் இருக்கிறது. இதனால், மக்கள்தொகையுடன் வளங்களை ஒப்பிடும்போது இயற்கையாகவே குறைவாக உள்ளது. இந்த சமத்துவமின்மையை களைய கடின உழைப்பு தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

advertisement by google

மக்கள் தொகை கணக்கெடுப்பு
அடிப்படையில் நலத்திட்டங்கள்
அமித்ஷா மேலும் கூறுகையில், கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், எரிவாயு இணைப்பு, சாலை வசதியை மேம்படுத்துதல், வங்கிக் கிளைகள் திறத்தல், அனைவருக்கும் வீடு, கழிப்பறை, வங்கி கணக்கு உள்ளிட்ட 22 நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியது. வரும் 2022ம் ஆண்டில் எந்த வீட்டிலும் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருக்காது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் பாலின வேறுபாடு அதிகம் காணப்பட்டது. இதையடுத்தே, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அரியானா மாநில அரசு கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு பாலின வேறுபாட்டை களைந்து நாட்டின் சிறந்த மாநிலமாக உருவாகி உள்ளது’’ என்றார்.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button