உலக செய்திகள்பயனுள்ள தகவல்மருத்துவம்

தனது உயரத்தை 6’1″ ஆக அதிகரிக்க ஆப்ரேஷன் செய்த நபர்✍️காலின் உயரத்தை அதிகரிக்கும் அறுவை சிகிச்சைக்கு 55 லட்சம் ரூபாய் செலவா✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தனது உயரத்தை 6’1″ ஆக அதிகரிக்க ஆப்ரேஷன் செய்த நபர்!

advertisement by google

கூடைப்பந்தாட்ட வீரர்களை போன்ற உயரம் வேண்டும் என ஆசைப்பட்ட நபர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது உயரத்தை அதிகரித்திருக்கிறார்.

advertisement by google

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், டல்லாஸ் நகரைச் சேர்ந்தவர் அல்ஃபோன்ஸோ ஃபுளோர்ஸ் (வயது 28). சிறுவயது முதலே கூடைப்பந்தாட்ட ரசிகராக இருந்து வரும் அல்ஃபோன்ஸோ, தனது கால்பந்தாட்ட நாயகர்கள் போலவே தானும் வாலிபரான பின்னர் தான் 6 அடிக்கு மேல் உயரமாக இருக்க வேண்டும் என 12 வயது முதலே ஆசைப்பட்டுள்ளார்.

advertisement by google

தனது சிறு வயது முதலே இருந்து வரும் ஆசையை தற்போது நனவாக்கியிருக்கிறார் அல்ஃபோன்ஸோ. இத்தனைக்கும் இவர் குள்ளமானவர் கூட இல்லை, 5 அடி’11 இஞ்ச் எனும் நல்ல உயரம் கொண்டவரே.

advertisement by google

இருப்பினும் 6 அடிக்கு மேல் உயரம் இருக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக அழகுக்கான அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்தார். அனாவசியமான இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்ள வேண்டாம் என குடும்பத்தினர் தடுத்த போதிலும் தனது முடிவில் உறுதியாக இருந்து உயரத்தை அதிகரித்திருக்கிறார் இவர்.

advertisement by google

காலின் உயரத்தை அதிகரிக்கும் அறுவை சிகிச்சையை சுமார் 55 லட்ச ரூபாய் செலவில் இவர் மேற்கொண்டு 2 இஞ்ச் அதிகமாக தனது உயரத்தை அதிகரித்து தற்போது 6 அடி1 இஞ்ச் ஆக மாறியிருக்கிறார்.

advertisement by google

லாஸ் வேகஸில் உள்ள LimbplastX Instituteஐ சேர்ந்த Kevin Debiparshad எனும் மருத்துவர் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்திருக்கிறார்.

advertisement by google

பொதுவாகவே இவ்வாறான அறுவை சிகிச்சை கட்டணம் என்பது $75,000 என்ற அளவில் இருக்கும் என தெரிவித்தனர். femur எனும் தொடை எலும்பு அல்லது tibia எனும் கீழ் கால் எலும்பை இந்த சிகிச்சையின் மூலம் நீட்டிக்கின்றனர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பும், பின்னரும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அல்ஃபோன்ஸோ ஃபுளோர்ஸ் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து தனது கனவு நிறைவேறியதாக குறிப்பிட்டுள்ளார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button