இந்தியா

வங்கியில் பணம் எடுத்தாலும் கட்டணம், போட்டாலும் கட்டணம்; முடிவுக்கு வந்தது இலவச சேவை✍️வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

?? வங்கியில் பணம் எடுத்தாலும் கட்டணம், போட்டாலும் கட்டணம்; முடிவுக்கு வந்தது இலவச சேவை!

advertisement by google

Bank of Baroda வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கு அளிக்கப்பட்டு வந்த இலவச சேவை முடிவுக்கு வந்துள்ளது. நவம்பர் 1 முதல், வங்கியில் இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

advertisement by google

பாங்க் ஆப் இந்தியாவைத் தொடர்ந்து (Bank of India), பி.என்.பி (PNB), ஆக்சிஸ் வங்கி (Axis Bank) மற்றும் சென்ட்ரல் வங்கி (Central Bank) ஆகியவையும் விரைவில் இதேபோல் பணம் போட்டாலும் கட்டணம், எடுத்தாலும் கட்டணம் என்ற முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

advertisement by google

எனினும் வங்கிகள் குறிப்பிட்ட அளவு பணம் எடுத்தல் சேவையை இலவசமாக வழங்கும் , அதேபோல் பணம் கட்டும் சேவையையும் இலவமாக வழங்கும்.

advertisement by google

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போனால் மட்டுமே கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது

advertisement by google

பாங்க் ஆப் பரோடா கட்டணங்கள்
நடப்பு கணக்கு கட்டணம்
நடப்புக் கணக்கு (Current account), பணக்கடன் வரம்பு (Cash Credit Limit ) மற்றும் ஓவர் டிராஃப்ட் கணக்கில் (Overdraft Account) பணத்தை டெபாசிட் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும் பாங்க் ஆப் பரோடா கட்டணங்கள் பட்டியலை உருவாக்கி உள்ளத,. சேமிப்பு வங்கி கணக்கில் (Savings Bank account) உள்ள பணத்தை திரும்பப் பெறுவதற்கான தனி கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

advertisement by google

மூன்று முறை இலவசம்; பணம் எடுக்க 40 ரூபாய் கட்டணம்:

advertisement by google

இனி ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் மூன்று முறை வங்கி கணக்கில் இருந்து பணத்தை இலவசமாக எடுக்கலாம். அதற்கு மேல் எடுத்தால் 150 கட்டணம் செலுத்த வேண்டும். சேமிப்பு கணக்கு (Savings Account) வாடிக்கையாளர்கள் மூன்று முறை வரை பணத்தை இலவசமாக டெபாசிட் செய்யலாம். ஆனால் நான்காவது முறையாக கணக்கில் டெபாசிட் செய்தால், 40 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஜன் தன் கணக்கு (Jan Dhan Account) வைத்திருப்பவர்கள் மட்டும் பணத்தை டெபாசிட் செய்வதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. ஆனால் பணத்தை மூன்று முறைக்கு மேல் திரும்பப் பெறுவதற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்*

திரும்ப பெற கட்டணம்:

ரொக்க கடன் வரம்பு, நடப்பு கணக்கு மற்றும் ஓவர் டிராஃப்ட் கணக்கு வைத்திருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் அதிக பணம் டெபாசிட் செய்ய வங்கிகள் கட்டணம் வசூலிக்கும். அதாவது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்ய, ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் வசூலிக்கப்படும். இதற்கான குறைந்தபட்ச வரம்பு 50 மற்றும் அதிகபட்ச வரம்பு 20 ஆயிரம் ரூபாய் ஆகும். கடன் வரம்பு, நடப்புக் கணக்கு மற்றும் ஓவர் டிராஃப்ட் கணக்குகளில் இருந்து ஒரு மாதத்திற்கு மூன்று முறை பணம் திரும்பப் பெறப்பட்டால், கட்டணம் வசூலிக்கப்படாது. நான்காவது முறையாக திரும்பப் பெறும்போது, ​​ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button