இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன்பங்களாவுக்குள் கால் வைத்த தீபா..✍️ திக் திக் பால்கனிபோயஸ் கார்டன் “மர்ம அரசியல்”..✍️ எடப்பாடி காதுக்கு சென்ற தகவல்..!*✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

பங்களாவுக்குள் கால் வைத்த தீபா.. போயஸ் கார்டன் “மர்ம அரசியல்”.. எடப்பாடி காதுக்கு சென்ற தகவல்..!*

advertisement by google

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.. அது தொடர்பான பரபரப்பு தகவல்கள் கார்டனில் வட்டமடித்து கொண்டே இருக்கிறது.

advertisement by google

ஒரு பால்கனி வரலாற்றில் இடம்பிடிக்கிறது என்றால் அது நிச்சயம் ஜெயலலிதா வீட்டு பால்கனி என்பதை மறுக்க முடியாது.

advertisement by google

ஜெ.வின் ஒவ்வொரு வெற்றியும் இந்த பால்கனியில் இருந்துதான் துவங்கும்.. மக்களுடன் நெருக்கமாக இருக்க செய்வதும் இந்த பால்கனிதான்.. வெற்றி புன்னகையுடன் இரட்டை விரல் காட்டி ஜெயலலிதா மகிழும் இடமும் பெரும்பாலும் இந்த பால்கனிதான்..

advertisement by google

அப்படிப்பட் வேதா இல்லம்தான் வழக்கு விசாரணை, கோர்ட்டின் பிடியில் சென்றது.. இறுதியில் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றப்பட்ட அரசாணையை ரத்து செய்தத்துடன், அந்த பங்களாவை ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வாரிசுகளிடம் பங்களாவின் சாவியை சென்னை மாவட்ட கலெக்டர் ஒப்படைத்தார்..

advertisement by google

இந்த சூழலில், பங்களாவுக்குள் நுழைந்த தீபா, வழக்கமாக ஜெயலலிதா நிற்கும் அதே இடத்தில் நின்று கை காட்டி தன்னுடைய மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருந்தார்… அத்துடன், பங்களாவில் இருந்த பல பொருட்கள் காணவில்லை, என் அத்தை படுக்கும் படுக்கையை காணவில்லை என்றும் தீபா பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இருந்தார்.. மேலும் மரணத்துக்கு சசிகலா தான் காரணம் என்றும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

advertisement by google

தீபாவுக்கு பங்களா கிடைத்து விட்டாலும், இந்த பிரச்சனை அத்துடன் ஓயவில்லை.. வாரிசுதாரர்களிடம் போயஸ் கார்டனை ஒப்படைக்க உத்தரவிடப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது அதிமுக தலைமை… இதற்கான மனுவை சமீபத்தில் தாக்கல் செய்திருக்கிறார் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்… எனவே, மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதால் போயஸ் கார்டன் பங்களைவை அவ்வளவு எளிதாக முழுமையாக வாரிசுகளால் கைப்பற்ற முடியாத சூழல் உள்ளது..

advertisement by google

அதுமட்டுமல்ல வருமானவரி பாக்கிக்காக இந்த பங்களாவை வருமானவரித்துறை தங்கள் வழக்கில் இணைத்திருக்கிறது… சுமார் 36 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டியதிருக்கிறது என்கிறார்கள்.. இவ்வளவு தொகையை வாரிசுதாரர்களால் கட்டமுடியாத சூழல் உள்ளது.. அதனால் கடந்த 2 நாட்களாக தீபக்கும் தீபாவும் வழக்கறிஞர்களிடம் பேசியிருக்கிறார்கள்… அப்போதுதான் சில விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதாவது, பங்களாவை விற்றால்தான் வரி பாக்கியை கட்டமுடியும் என்பதால், உடனே விற்பதற்கு முயற்சி செய்யுங்கள் என்று வாரிசுகள் யோசனை சொல்லி உள்ளதாக தெரிகிறது.. மேலும், வாங்கும் சக்தியுள்ள கோடிஸ்வரர்களிடம் விற்க முயற்சித்தாலோ, பொது ஏலத்திற்கு விற்று வரி பாக்கியை கட்டிய தொகைப்போக மீதியை நாம் எடுத்துக் கொண்டாலோ எதிர்மறை விமர்சனங்கள்தான் வரும் என்பதால், அதிமுக தலைவர்களிடமே பங்களாவை எடுத்துக்கொள்ள கேட்டுப் பார்க்கலாம் என்றும் ஐடியா கூறியுள்ளனர்.

அத்தையின் சொத்துக்களுக்கு நாம் தான் வாரிசு என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.. அதனால், இப்போது அதிமுக தரப்பிடமே விற்பதுதான் சரியாக இருக்கும் என்றும் தீபா அப்போது வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தினாராம்.. அதுமட்டுமல்ல, அதிமுக தரப்புக்கு சென்றால் மேல் முறையீடுகளையும் அதிமுக வாபஸ் பெற்றுக் கொள்ளும். அதிமுகவை தவிர்த்து இதனை மாற்று யோசித்தால், அதிமுக தலைவர்கள் சுப்ரீம் கோர்ட் வரை போய்விடுவார்கள்.

அந்த தீர்ப்பு கிடைக்க வெகு நாட்கள் ஆகிவிடும்.. அதுவும் ஒருவகையில் சிக்கல் தான்.. என்றெல்லாம் வழக்கறிஞர், நண்பர்களுக்கிடையே வாரிசு தரப்பு விவாதித்ததாம். இறுதியில் பங்களாவை விற்கும் யோசனையில் வாரிசுகள் இருப்பதாக, எடப்பாடிக்கும் அந்த தகவல் எட்டியுள்ளது.. எடப்பாடி தரப்பும் அது பற்றி யோசித்து வருகிறதாம்.. பங்களாவை சுற்றி இன்னும் நிறைய அரசியல்கள் நடக்கும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button