t

செப்டம்பர் 18 முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

SBI: செப்டம்பர் 18 முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்

advertisement by google

செப்டம்பர் 18 முதல் SBIயில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணம் திரும்ப எடுப்பதில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்…

advertisement by google

புதுடெல்லி:
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இப்போது OTP சரிபார்ப்பிற்குப் பிறகு 10,000 ரூபாய்க்கு மேல் ATMஇல் இருந்து எடுக்கலாம். வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் அந்த OTP எண் அனுப்பப்படும்.

advertisement by google

இந்தியாவின் மிகப் பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான நேரத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இது செப்டம்பர் 18, 2020 முதல் நடைமுறைக்கு வரும்.

advertisement by google

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இப்போது OTP சரிபார்ப்பிற்குப் பிறகு 10,000 ரூபாய்க்கு மேல் ATMஇல் இருந்து எடுக்கலாம். இனிமேல் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் அந்த OTP எண் அனுப்பப்படும்.

advertisement by google

இந்த கூடுதல் காரணியால், அட்டைதார்ர்களைத் தவிர வேறு யாரும் பணத்தை ATMஇல் இருந்து எடுக்காமல் தடுக்க முடியும். ஜனவரி மாதத்தில் தான், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை வங்கி இந்த ஏற்பாட்டை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது.

advertisement by google

OTP- சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை எவ்வாறு செயல்படுகிறது?

advertisement by google

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP- சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனைகளை SBI அறிமுகப்படுத்தியது. பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்க OTP அடிப்படையிலான இந்த முறையை அறிமுகப்படுத்திய ஸ்டேட் வங்கி பணம் எடுக்கும் முறையில் மற்றொரு அடுக்கு பாதுகாப்பைச் சேர்த்தது.

மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் இருந்து, SBI அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும்போது இந்த வசதி பொருந்தாது, அட்டைதாரர் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்டவுடன், ஏடிஎம் திரை OTP சாளரத்தைக் காண்பிக்கும். பரிவர்த்தனையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வாடிக்கையாளர் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP எண்ணை உள்ளிட வேண்டும்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button