t

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் PSBB ஆசிரியர்கள்✍️கராத்தே மாஸ்டர் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்; கராத்தே மாஸ்டர் கைது: விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் PSBB ஆசிரியர்கள்! பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சென்னை அண்ணாநகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். Related Stories Related Stories

advertisement by google

சென்னை கே.கே.நகரிலுள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ராஜகோபாலன், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

advertisement by google

ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, மாணவிகள் புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

advertisement by google

மேலும் இந்தக் கடிதம் தொடர்பாக பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில், துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையிலான போலிஸார் தலைமறைவாக இருந்த ராஜகோபாலை கைது செய்து, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

advertisement by google

விசாரணையைத் தொடர்ந்து செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, ராஜகோபாலானால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு மாணவிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காவல்துறையில் புகார் அளித்தனர்.

advertisement by google

தற்போது மேலும் 3 மாணவிகள் ராஜகோபாலன் மீது புகார் முறைப்படி புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தற்போது விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. மொத்தமாக தற்போதுவரை ராஜகோபலனால் பாதிக்கப்பட்ட 5 மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

advertisement by google

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி, பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். இதனிடையே, ராஜகோபாலன் வாக்குமுலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, இந்த சம்பவம் பல ஆண்டுகள் நடப்பதாகவும், இதில், இன்னும் பலர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும், பல ஆசிரியர்களுக்கு தெரியும் என்பதுபோல் அவரின் வாக்குமுலம் அமைந்துள்ளது.

advertisement by google

இந்நிலையில், போலிஸார் விசாரணையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் சென்ற நிலையில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கேபி ராஜிடம் அண்ணாநகர் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கராத்தே மாஸ்டர் கேபின் ராஜ் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலிஸார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நிறைவு பெற்ற பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

அதுமட்டுமின்றி துணை ஆணையர் ஜெயலட்சுமியின் வாட்சப் எண்ணிற்கு அனுப்பப்பட்ட பாலியல் தொடர்பான புகாரின் பேரில் இன்னும் பல ஆசிரியர்கள் சிக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அதிகரிப்பதைத் தொடர்ந்து அப்பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button