இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தமிழகத்தில் நேற்று இரவு வரை (15.09.2020) நடந்த பரபரப்பு செய்திகள் முழுத்தொகுப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google
தமிழகத்தில் நேற்றுநடந்த பரபரப்பு செய்திகள்

advertisement by google

♈?♈சமூக வலைத்தளம் மூலம் ஆண் நண்பர்களுடன் பழகியதால் கொன்றோம்

advertisement by google

♈பேரையூர்: சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண் நண்பர்களுடன் பழகியதால் மனைவியை கொன்றதாக கைதான கணவர் உட்பட 3 பேர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே வி.அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த தவிடன் மகள் ஜெயசக்திபாலா (18). இவருக்கும் விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் மத்தியசேணையைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகன் முத்துப்பாண்டிக்கும் (20), பத்து மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்குள் கருத்து வேறுபாட்டால், கடந்த 3 மாதமாக ஜெயசக்திபாலா, பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இவர் கடந்த 12ம் தேதி வி.அம்மாபட்டி கண்மாயில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக கணவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.போலீசார் விசாரணையில், ஜெயசக்திபாலா பேஸ்புக், வாட்ஸ்அப், செல்போன் மூலம் ஆண் நண்பர்களுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஜெயசக்திபாலா பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். முத்துப்பாண்டி பலமுறை மனைவியை அழைத்தும் அவர் போகவில்லை என கூறப்படுகிறது. வி.அம்மாபட்டியில் உள்ள உறவினர்கள், தம்பதியிடம் சமாதானமாக பேசி மீண்டும் சேர்ந்து வாழ வைக்க திட்டமிட்டனர். இந்நிலையில் மனைவி மீது சந்தேகம் அடைந்த முத்துப்பாண்டி, காரியாபட்டி கல்குறிச்சியைச் சேர்ந்த தனது நண்பர் மகன் கண்ணன் (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). மத்தியசேனையில் இருக்கும் உறவினர் மகன் கணேசன் (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.சம்பவ தினத்தன்று கண்ணனிடம் மனைவியை அழைத்து வருமாறு கூறிவிட்டு, முத்துப்பாண்டி, கணேசனுடன் அம்மாபட்டி கண்மாய்க்குள் பதுங்கிக் கொண்டனர். கண்ணன் இரவு 9 மணியளவில் அம்மாபட்டி மெயின்ரோட்டில் நின்று கொண்டு ஜெயசக்திபாலவை போனில் அழைத்துள்ளார். வீட்டிலிருந்து வந்த அவரை, கண்ணன் கண்மாய்க்குள் அழைத்துச் சென்றார். அங்கு மூவரும் சேர்ந்து ஜெயசக்திபாலாவை குத்திக் கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

advertisement by google

♈?♈சேலம் உதவி கமிஷனர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு: மோசடியில் ஈடுபட வடமாநில கும்பல் முயற்சி

advertisement by google

♈சேலம்:வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டின் பின்கோடு நம்பரை பெற்று பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு அழைக்கும் நபர்களை உண்மை என நம்பி கார்டு நம்பரை கொடுப்பவர்களின் வங்கி கணக்கில் இருந்து அனைத்து பணத்தை சில நிமிடத்தில் எடுத்துக் கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது.இந்த நிலையில் போலீஸ் உதவி கமி‌ஷனர் பெயரில் இந்த மோசடி கும்பல் களம் இறங்கி உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

advertisement by google

♈சேலம் அஸ்தம்பட்டியில் உதவி கமி‌ஷனராக இருப்பவர் அனந்தகுமார். இவரது பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கை தொடங்கிய நபர்கள் உடனடியாக ரூ. 20 ஆயிரம் தேவைப்படுகிறது எனவும், பணத்தை நாளைக்கே கொடுத்து விடுவதாகவும் தெரிவித்திருந்தனர்.இதனை பார்த்து கமி‌ஷனரின் நண்பர்கள் அவருக்கு போன் செய்து விசாரித்தபோது மர்மநபர்கள் சிலர் போலியாக பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த போலி கணக்கை முடக்கும்படியும் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சேலம் சைபர் கிரைம் பிரிவில் உதவி கமி‌ஷனர் அனந்தகுமார் புகார் கொடுத்தார்.முதற்கட்ட விசாரணையில் மத்திய பிரதேசத்தில் இருந்து இந்த கும்பல் செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களை அடையாளம் காணும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

advertisement by google

♈?♈சீனாவை வீழ்த்தி ஐ.நா. சபையின் பெண்கள் ஆணைய உறுப்பினர் தேர்தலில் இந்தியா வெற்றி

advertisement by google

♈நியூயார்க்:ஐ.நா. சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலின் அமைப்பான பெண்கள் நிலை ஆணையம், பாலின சமத்துவம், பெண்களின் மேம்பாட்டுக்கான பணிகளை செய்து வருகிறது.இது ஐ.நா.வின் முக்கியமான அமைப்புகளில் ஒன்றாகும். இந்தநிலையில் பெண்கள் நிலை ஆணைய உறுப்பினர் இடத்துக்கான தேர்தல் நடந்தது.இதில் இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் 54 இடங்களை பெற்று உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றன. சீனா தோல்வியை சந்தித்தது.இதுதொடர்பாக சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிஇருப்பதாவது:-

♈“பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலிங் அமைப்பான ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.இது இந்தியா அனைத்து துறைகளிலும் பெண்கள் சமத்துவத்தை உறுதிபடுத்தியதற்கு கிடைத்த வெகுமதி மற்றும் ஒப்புதல் ஆகும். இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி” என்று தெரிவித்து உள்ளார்.கடந்த ஜூன் 18-ந் தேதி ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் இந்தியா 8-வது முறையாக வெற்றி பெற்று தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.

♈?♈மகாராஷ்டிரா கவர்னருடன் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி சந்திப்பு

♈மும்பையில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மா என்பவர், சிவசேனாவுக்கு எதிரான குறுஞ்செய்தியை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்தது தொடர்பாக கொலை மிரட்டல் வந்த நிலையில் கும்பல் ஒன்று அவரது வீட்டிற்கு சென்று அவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.அவர்மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கூறப்படும் சிவசேனா தொண்டர்களான கம்லேஷ் கதம் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, சட்டம் மற்றும் ஒழுங்கை கவனிக்க முடியவில்லை எனில் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுங்கள் என தாக்கப்பட்ட கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி மதன் சர்மா ராஜ்பவனில் மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை இன்று சந்தித்தார்.

♈?♈மகாராஷ்டிராவில் மேலும் 371 காவலர்களுக்கு கொரோனா தொற்று

♈மும்பை:நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மகாராஷ்டிராவில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 371 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா காவல்துறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,756 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 8 போலீசார் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது.மாநிலத்தில் இதுவரை 15,830 காவலர்கள் கொரோனா நோய்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 3,724 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

♈?♈சென்னை புளியந்தோப்பில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி.. மின்வாரிய ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்

♈சென்னை: சென்னை புளியந்தோப்பில் மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவர் பலியான சம்பவத்தில் மின்வாரிய ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.சென்னை பெரியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் அலிமா(35). இவரது கணவர் ஷேக் அப்துல் மற்றும் ஒரு மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.இவர் புளியந்தோப்பு நாராயணசாமி தெரு பகுதியில் உள்ள சாகிதா பேகம் என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அலிமா வீட்டு வேலை செய்வதற்காக நாராயணசுவாமி தெரு வழியாக சென்று கொண்டு இருந்தார்.அப்போது சாலையில் தண்ணீரும் சேறுமாக இருந்ததால் ஓரமாக நடந்து வந்தார். அப்போது பூமிக்கடியில் புதையுண்டு கிடந்த மின் கேபிள் வெளியே வந்து கிடந்தது. அந்த கம்பியை மிதித்த அலிமா அதே இடத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துவிட்டார்.இது போன்று கம்பி வெளியே வந்துள்ளது என கடந்த 20 நாட்களாக புகார் தெரிவித்தும் மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.இந்த நிலையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சம்பவத்தில் இரு மின் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். உதவி கோட்ட மின்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் வெங்கட்ராமன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.

♈?♈சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் இறந்தது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

♈சென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் இறந்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர், மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் 2 வாரத்தில் விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது.

♈?♈கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் காவடி எடுத்து வந்து மனு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகி

♈கோவில்பட்டி:தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் அய்யலு சாமி.இவர் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு காவடி எடுத்து வந்து, அதில் யூரியா உரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை மற்றும் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி வாசகங்களுடன் மனு கொடுத்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-

♈ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கும் முன்பே யூரியா மூட்டைகளில் 5 கிலோ எடை குறைவாக உள்ளது என மனு வழங்கினேன்.நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சிலர் சட்டத்துக்கு புறம்பாக உரம் பதுக்கலில் ஈடுபடுகின்றனர் என மனு வழங்கினேன். இதற்கு பதில் அளித்துள்ள வேளாண்மை அதிகாரிகள், தேவையான அளவு உரம் கையிருப்பு உள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் உரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.ஆனால் 3 மாவட்டங்களிலும் முறைகேடாக உரம் பதுக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி பயணியர் விடுதி முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

♈?♈தேர்தல் விரோதத்தால் இறந்தவர் உடலை தகனம் செய்யவிடாமல் விரட்டியடிப்பு

♈விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக, இறந்தவர் உடலை தகனம் செய்ய வந்தவர்களை பயங்கர ஆயுதங்களுடன் தாக்க வந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் உடல் தகனம் செய்யப்பட்டது.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி மனைவி தனலட்சுமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ் மனைவி கனிமொழி. இருவரும் ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டனர். தனலட்சுமி தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால், அய்யாசாமி, வரதராஜ் தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அய்யாசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.நேற்று முன்தினம் புதிய காலனியைச் சேர்ந்த கோவில் பூசாரியான சேகர் உடல்நலக்குறைவால் இறந்தார். நேற்று மாலை 5:00 மணியளவில், அவரது உடலை தகனம் செய்ய பழைய காலனி வழியாக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த, வரதராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இறுதி சடங்கு செய்ய வந்தவர்களை தாக்க முயன்றனர்.இதனால், உடலை தகனம் செய்யாமல் அங்கேயே போட்டுவிட்டு அனைவரும் தப்பியோடினர்.தகவலறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடலை தகனம் செய்வதற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதாக, உறுதியளித்தார். அதன்பேரில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், இரவு 8:00 மணியளவில், உடல் தகனம் செய்யப்பட்டது.பயன்தராமல் போனசமாதான கூட்டம்தேர்தல் முன்விரோதம் காரணமாக கடந்த 3ம் தேதி சப் கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.
அதில், 110 விதியின் கீழ், சப் கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலையில், இருதரப்பினரிடையே சமாதானம் செய்து வைக்கப்பட்டது. ஆனால், சமாதான கூட்டம் நடந்த 10 நாட்களில் இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

♈?♈அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது.: முதல்வர் பேச்சு

♈சென்னை: தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா தமிழகத்தை மட்டுமல்ல, உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. மேலும் நோய் வருவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தொற்று குறைந்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

♈?♈சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை தொடர்பாக அவர்களது உறவினர்களிடம் சிபிஐ விசாரணை

♈தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை தொடர்பாக அவர்களது உறவினர்களிடம் சி.பி.ஐ. விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் தொடர்பாக அவர்களது அண்டை வீட்டாரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

♈?♈சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வு இல்லை: துணை வேந்தர் விளக்கம்

♈சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வு இல்லை, ஆன்லைனில் அனுப்பப்படும் கேள்வித்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வீட்டில் தேர்வு எழுத வேண்டும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் கௌரி விளக்கம் அளித்துள்ளார். தேர்வை 2 மணி நேரத்தில் எழுதி மாணவர்கள் புகைப்படம் எடுத்து மீண்டும் ஆன்லைனில் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

♈?♈கேரள தங்கக்கடத்தல் விவகாரம்.: திருச்சியில் 2 நகைக்கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

♈திருச்சி: கேரள தங்கக்கடத்தல் விவகாரம் குறித்து திருச்சியில் 2 நகைக்கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை உத்தரவின் பேரில் தங்க நகைகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றது.

   

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button