இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தமிழக பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

advertisement by google

பெண்
குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரதீரசெயல் புரிந்த 5 முதல் 18 வயதிற்குட்ட பெண்
குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது தேர்வுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்
நந்தூரி தெரிவித்துள்ளார்.

advertisement by google

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

advertisement by google

✍ 2020ம் ஆண்டிற்கான பெண்கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்
குழந்தை திருமணம் தடுத்தல், சமூக அவலங்கள் மற்றும் அதனை தீர்வு காண்பதற்கான
புத்தகங்கள் மற்றும் கையெடு எழுதி வெளியிட்டவர்கள், ஆண்கள் மட்டுமே சாதிக்க
முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற
வீரதீரசெயல் புரிந்த 5 முதல் 18 வயதிற்குட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண்
குழந்தைகளுக்கு பெண் குழந்தை தினமான ஜனவரி-24இல் மாநில அரசின்
விருதுக்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படுகிறது. இப்போட்டியில்
பங்கேற்பதற்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடையவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த
தகுதியுடையவர்கள் இது தொடர்பான விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட மாவட்ட
சமூகநல அலுவலக முகவரியில் 15.09.2020 அன்று மாலை ஐந்து மணிக்குள் சமர்ப்பிக்க
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

advertisement by google

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி

advertisement by google

1)மாவட்ட சமூகநல அலுவலர்,
2)மாவட்ட சமூகநல அலுவலகம்,
3)மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோரம்பள்ளம்,
தூத்துக்குடி – 628101 Ph.-0461-2325606
இந்த தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி
தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button