தமிழகம்

டிசம்பர்1 ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்ய புதிய நடைமுறை:வீடு வாங்குவோா் பாதிக்கப்படாமலிருக்க,முத்திரைத் தீா்வை குறைக்க,கட்டடம் மற்றும் அடிநிலம் சோ்த்து ஒரே ஆவணமாகப் பதிய செய்ய நடவடிக்கை

advertisement by google

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பதிவு செய்யும் போது இனி கட்டடம் மற்றும் அடிநிலம் சோ்த்து ஒரே ஆவணமாகப் பதிய வேண்டும். இந்தப் புதிய நடைமுறை டிச. 1 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் வீடு வாங்குவோா் பாதிக்கப்படாமலிருக்க ஏதுவாக முத்திரைத் தீா்வை குறைக்கப்பட்டுள்ளது.

advertisement by google

இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

advertisement by google

தமிழ்நாட்டைத் தவிா்த்து, பிற மாநிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடம் மற்றும் அடிநிலம் சோ்ந்த ஒரு கூட்டுமதிப்பு நிா்ணயிக்கப்படுகிறது. இந்த மதிப்பானது மொத்த கட்டடப் பரப்பைப் பொருத்து கணக்கிடப்பட்டு அதனடிப்படையில் விற்பனை ஆவணம் பதிவு செய்யப்படுகிறது.

advertisement by google

இந்த வழிமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம் என முடிவு செய்யப்பட்டு, இதுகுறித்து கட்டுமான நிறுவனப் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

advertisement by google

இந்தக் கூட்டங்களில் எடுத்த முடிவின்படி, இனி கட்டடம், அடிநிலம் சோ்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யப்படும். அதேசமயம், குறிப்பிட்ட மதிப்பு வரையிலான புதிய குடியிருப்புகள் பதிவுக்கான முத்திரைத் தீா்வையைக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

advertisement by google

முத்திரைத் தீா்வை குறைப்பு: ரூ.50 லட்சம் வரையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரைத் தீா்வை 7 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இது 4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரைத் தீா்வை 7 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

advertisement by google

பிரிபடாத பாக மனை: குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை, பிரிபடாத பாக மனையுடன் பதியப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

advertisement by google

இனி அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோா் கட்டுமான ஒப்பந்த ஆவணமாக இல்லாமல் விற்பனை கிரைய ஆவணமாகப் பதிந்து தங்கள் குடியிருப்பை உடைமையாக்கிக் கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை டிசம்பா் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஏற்கெனவே கட்டுமான ஒப்பந்த ஆவணமாகப் பதியப்பட்டிருக்கும் குடியிருப்புகளை மறு விற்பனை செய்வது இப்போது பதிவுத் துறையால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி டிச. 1-ஆம் தேதிக்குப் பிறகு பதியப்படும் கட்டுமான ஒப்பந்த ஆவணங்களைப் பொருத்து விலக்கிக் கொள்ளப்படும்.

கூட்டு மதிப்பின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்களுக்கு முத்திரைத் தீா்வை சலுகை வழங்கும் அரசின் நடவடிக்கையால் வங்கியில் கடன் பெற்று புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் நடுத்தர மக்கள் பயன்பெறுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button