பயனுள்ள தகவல்மருத்துவம்

மார்பகத்தின் பாதிப்பையும்,ஆரோக்கியத்தை கெடுக்கும் 8 விதமான பழக்க வழக்கம்✍️ முழு விவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

இந்த 8 பழக்கங்களும் உங்கள் மார்பகத்தின் ஆரோக்கியத்தை கெடுக்குமாம்…*

advertisement by google

பொதுவாக பெண்களின் மார்பகங்கள் உணர்திறன் கொண்டவை. சில பொதுவான காரணங்களால் மார்பகங்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. நம்மில் பெரும்பாலனோர் மார்பகங்களில் மீது கவனம் செலுத்துவதில்லை. ஆனால் உங்க மார்பகங்கள் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பகுதி ஆகும்.

advertisement by google

​மார்பக ஆரோக்கியம்

advertisement by google

உங்க மார்பகங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்த அவற்றை கவனிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மார்பகம் தொடர்பான நோய்களை தவிர்க்க நீங்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஆனால் பல பெண்கள் மார்பகங்களை பாதிக்கும் பழக்க வழக்கங்களை செய்து வருகிறார்கள்.

advertisement by google

உங்க மார்பகங்கள் ஆரோக்கியமாகவும் சிறந்த வடிவத்தில் இருப்பதை உறுதி செய்ய இந்த 8 விஷயங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.

advertisement by google

​தவறான பிராக்களை தேர்ந்தெடுப்பது

advertisement by google

நீங்கள் தவறான பிராக்களை தேர்ந்தெடுப்பது உங்களுக்கு பலவித மார்பக பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. தவறான பிராக்கள் உங்களுக்கு மீளமுடியாத தொய்வு மற்றும் நீட்டிப்பை ஏற்படுத்தும். மிக மோசமான சூழ்நிலையில் மிக இறுக்கமாக பிராக்களை அணிவது உங்க மார்பக இரத்த ஓட்டத்தை பாதிக்கும். தவறான பிராக்கள் கழுத்து, முதுகு மற்றும் தோள்பட்டையில் வலிகளை உண்டாக்கும்.

advertisement by google

​முலைக்காம்பு முடிகளை நீக்குவது

சில பெண்கள் முலைக்காம்பில் உள்ள முடிகளை நீக்க ஷேவிங், வாக்சிங் போன்ற செயல்களில் ஈடுபடுவதுண்டு. உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கிய இதழ் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, முலைக்காம்பு பகுதியைச் சுற்றி ரேஸர்களைப் பயன்படுத்துவது தொற்றுநோயை ஏற்படுத்தும். கூடுதலாக, முடி அகற்றுவதும் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

​முலைக்காம்பு குத்துதல் முறை

இப்பொழுது ஸ்டைல் சிகிச்சை என்ற பெயரில் முலைக்காம்பு குத்துதல் பாணியை பின்பற்றுகின்றனர். அயோவா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் முலைக்காம்பு குத்துதல் பால் உற்பத்தி குழாய்களை சேதப்படுத்தும் என்றும் முலைக்காம்பு குழாய்களில் ஒரு புண் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் இது வலி மிகுந்த சீழ் நிறைந்த தொற்றுநோயாகும் என்றும் கூறுகிறது.

​அதிகப்படியான புகைப்பழக்கம் மற்றும் காஃபைன் உட்கொள்ளல்

புகைப்பிடிக்கும் பழக்கம் உங்க நுரையீரல் மற்றும் இதயத்திற்கு நல்லது கிடையாது. இது நெகிழ்ச்சி இழப்பு, தொய்வு, மார்பக மென்மை மற்றும் மார்பக புற்றுநோயின் ஆபத்து போன்ற மார்பக தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

​உடற்பயிற்சி செய்யும் போது பிரா அணியுங்கள்

ஜிம்மிற்கு வெளியே செல்லும் போதும் உடற்பயிற்சி செய்யும் போதும் பிரா அணிவது மிகவும் அவசியம். அது மார்பகங்களுக்கு போதுமான ஆதரவு கிடைக்க உதவி செய்யும். இது கடுமையான வலி மற்றும் அசெளகரியத்தை ஏற்படுத்தும்.

​டக் டேப்பிங் செய்வது

பிரா அணியாத போது டக் டேப்பிங் என்பது மார்பகங்களை தூக்குவதற்கும், ஆதரிப்பதற்கும், இயக்கத்தை குறைப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும். ஆனால் இது ஆரோக்கியமான நடைமுறை அல்ல. இது ஒவ்வாமை, அரிப்பு, மோசமான தடிப்புகள் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

​மார்பகங்களை ஈரப்பதமாக வைக்க வேண்டும்

உங்கள் மார்பகங்களில் உள்ள தோல் மிகவும் மெல்லியதாக இருப்பதால் அது எலாஸ்டிக் தன்மையை இழக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஒவ்வொரு நாளும் உங்க மார்பகங்களை ஈரப்பதமாக்க மறக்காதீர்கள்.

​வயிற்றால் படுத்து தூங்குங்கள்

வயிற்றில் படுத்து தூங்குவது மார்பகங்களுக்கு இரத்த ஓட்டத்தை குறைத்து தசை நார் மற்றும் திசுக்களை எதிர்மறையாக பாதிக்கும். எனவே உங்க மார்பகங்களை ஆரோக்கியமாக வைக்க நீங்கள் மல்லாக்க படுங்கள். குப்புற படுத்து உறங்காதீர்கள்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button