இந்தியாஉலக செய்திகள்

சீனாவுக்கு பதிலடி கொடுக்க ரெடி? 35,000 ராணுவ வீரர்களை அனுப்பும் இந்தியா? லடாக் எல்லையில் டென்ஷன்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

சீனாவுக்கு பதிலடி கொடுக்க ரெடி…….

advertisement by google

35,000 ராணுவ வீரர்களை அனுப்பும் இந்தியா……

advertisement by google

லடாக் எல்லையில் டென்ஷன்

advertisement by google

லடாக் எல்லையை ஒட்டிய சில பகுதிகளில் சீன ராணுவம் பின் வாங்க மறுப்பதால், இந்தியா கூடுதலாக படைகளை அங்கு அனுப்ப தொடங்கியுள்ளது.

advertisement by google

வரும் குளிர்காலத்தில் சீனா அத்துமீறும் வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால் அதை எதிர்கொள்வதற்கு இந்திய ராணுவம் தயார் படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

advertisement by google

லடாக் எல்லைப்பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை, இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

advertisement by google

இதன் பிறகு இதுவரை ராணுவ கமாண்டர்கள் அளவிலான நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் இது நடத்தப்பட்டன.

advertisement by google

இதன் விளைவாக, ஒரு சில பகுதிகளில் சீன ராணுவம் பின் வாங்கி உள்ளது.

சீனா படை குவிப்புஇருப்பினும் பெட்ரோலிங் பாயிண்ட் 17ஏ மற்றும் பாங்காங் திசோ போன்ற பகுதிகளில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

பாங்காங் திசோவில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இதுதொடர்பான சேட்டிலைட் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

அங்கு ஏரிகளை எளிதாக கடப்பதற்காக நவீன வகை படகுகளை சீன ராணுவம் கொண்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

குளிர் கால திட்டம்குளிர்காலத்தில் இந்த பகுதிகளில் மைனஸ் 30 டிகிரி வரை வெப்பநிலை நிலவும். எனவே அந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு தாக்குதல் நடத்த சீனா திட்டமிடலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியா முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளது

லடாக் பகுதியில் கூடுதலாக சுமார் 35,000 ராணுவ வீரர்களை இந்தியா குவித்து வருவதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

அனைத்து வகையான வியூகங்களையும் எதிர்கொள்வதற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது,

குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்கிறோம் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தயார் நிலைஅதேநேரம் மற்றொரு ராணுவ அதிகாரி கூறுகையில், பிரச்சனை என்றால் உடனடியாக விரைந்து செல்வதற்கு வசதியாக நமது ராணுவத்தின் ஒரு பிரிவு லடாக் பகுதியில் முகாமிட்டிருக்கும். பிற குழுக்கள் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சீன தூதர் கருத்துசீன ராணுவம் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு உடன்படும் அறிகுறி இல்லை. இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் வெளியிட்ட கருத்தும் இதற்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் சீன ராணுவம் பின் வாங்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையான எல்லைக் கட்டுப்பாடு கோடு பற்றி அவர் குறிப்பிடவில்லை. மேலும் கல்வான் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என்று அவர் தெரிவித்தார். எனவேதான் இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button