இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஒரு செகண்டில் காளியை தூக்கி சுவற்றில் மாறி மாறி அடித்தும் காலால் மிதித்தும் கொன்ற கோயில் யானை ?திருப்பறங்குன்றத்தில் அதிர்ச்சி?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

காளி அலறி யாரையும் கூப்பிடக்கூட நேரமில்லை…..

advertisement by google

ஒரு செகண்டில் காளியை தூக்கி சுவற்றில் மாறி மாறி அடித்தும்,….

advertisement by google

காலால் மிதித்தே கொன்றும்விட்டது கோயில் யானை…..

advertisement by google

இந்த சம்பவம் இன்னமும் திருப்பரங்குன்றத்தில் அதிர்ச்சி விலகாமல் உள்ளது.

advertisement by google

எல்லா கோயில்களும் சாத்தப்பட்டுள்ளதுபோலதான் அறுவடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும் ஊரடங்கால் பூட்டப்பட்டுள்ளது.

advertisement by google

இங்குதான் தெய்வானை என்ற யானை வளர்ந்து வந்திருக்கிறது..

அசாம் காட்டை சேர்ந்த யானை.. திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்து மூன்றரை வருஷமாகிறது.

அப்போது தெய்வானையின் வயசு 10! வந்ததில் இருந்தே தெய்வானை முரண்டு பிடித்து கொண்டே இருந்திருக்கிறது..

யாருக்குமே இது கட்டுப்படவில்லை.. இதனை கட்டுக்குள் கொண்டு வர பாகன்கள்தான் படாதபாடு பட்டு வந்துள்ளனர்..

நிறைய பயிற்சி தந்துள்ளனர்.. அதன்பிறகே லேசான மாற்றங்கள் வந்து, ஒத்துழைப்பும் ஓரளவு தர ஆரம்பித்துள்ளது.

ஆனால் தெய்வானை முழுசாக சரியாகவில்லை.. இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போடப்படவும், கோயில்கள் மூடப்பட்டது.

இதில் முக்கியமான பங்கு காளிக்குதான் போய் சேரும்..

காளி துணை பாகன்தான்..

இருந்தாலும் தெய்வானையுடன் எப்போதுமே நெருங்கி பழகுவதும், அதை கவனிப்பதும் காளிதான்..

காளிஸ்வரன் என்பது இவரது முழு பெயர். நேற்றும்கூட கோயில் மண்டபடத்தில் தெய்வானையை குளிக்க வைத்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் திடீரென யானை ஆவேசம் அடைந்தது.. அதன் பிளிறல் சத்தம் அந்த பகுதியை மிரட்டியது.

இதை பார்த்ததும் காளி உஷாராகி விட்டு, அங்கிருந்து தப்ப முயன்றார்.. ஆனால் தெய்வானை அதன் தும்பிக்கையிலேயே காளியை வசமாக பிடித்து கொண்டது..

அதனால் கதற ஆரம்பித்தார்.. அவரை முழுசாக கத்த கூட விடவில்லை.. காளியை அலேக்காக தூக்கி சுவற்றில் மாறி மாறி அடித்தது… இதில் மண்டை உடைந்து காளிக்கு ரத்தம் கொட்டியது.. உடம்பெல்லாம் காயங்களுடன் கீழே விழுந்தார்.. அப்போதும் ஆக்ரோஷம் குறையாத காளி, தன்னுடைய காலால் காளியை எட்டி எட்டி உதைத்தது.யானையின் பிளிறல், காளி எழுப்பிய அலறலால் இன்னொரு பாகன் ராஜேஷ் ஓடிவந்துள்ளார்..

யானையை கட்டுக்குள் கொண்டு முயற்சி செய்தார்… ஆனால் தெய்வானை ராஜேஷையும் அடிச்சு தூக்க அருகில் வந்தது.. அதனால் ராஜேஷ் உயிரை கையில் பிடித்து கோயில் சுவரில் ஏறி குறித்து தப்பினார்.. இதன்பிறகு கோயில் ஊழியர்கள் ஓடிவந்தனர். அவர்கள் தெய்வானை மீது தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து கொண்டே இருந்தனர்.. அதன்பிறகுதான் அந்த ஆவேசம் குறைய தொடங்கியது.

தெய்வானையின் ஆக்ரோஷம் காரணமாக, பக்கத்திலேயே உயிருக்கு போராடி கொண்டிருந்த காளியை கூட மீட்க முடியவில்லை.. யானை ஓரளவு இயல்புக்கு திரும்பியதும்தான், காளியை மீட்டு திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே காளி உயிர் பிரிந்தது..

உடனடியாக போலீசுக்கும், கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்தனர்.. தெய்வானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்… எந்நேரமும் தெய்வானையை பச்சபிள்ளை மாதிரி பக்கத்தில் இருந்தே பார்த்து கொண்ட காளிக்கு இந்த நிலைமையா? என்ற அதிர்ச்சி திருப்பரங்குன்றம் மக்களை பீடித்து வருகிறது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button