இந்தியாஉலக செய்திகள்வரலாறு

அழிந்து வரும் புலி இனத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச புலிகள் தினம்?இன்று சர்வதேச புலிகள் தினம்?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

✍?⚡இன்று சர்வதேச புலிகள் தினம்..!

advertisement by google

அழிந்து வரும் புலி இனத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம் புலிகளைப் பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு…

advertisement by google

பேராற்றலும், பேரழகும் கொண்ட உயிரினங்களில் முதலிடத்தில் உள்ளவை புலிகள் இனம். ஒருகாலத்தில் புலி வேட்டையாடுவது என்பது பெருமைக்குரிய ஒன்றாக பார்க்கப்பட்டது.

advertisement by google

100 ஆண்டுகளுக்கு முன்பு உலகளவில் புலிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. தற்போது வெறும் 3,800 புலிகள் மட்டுமே இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. வனப்பகுதியில் உள்ள புலிகளின் எண்ணிக்கையே அந்த வனத்தின் வளம் என வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

advertisement by google

கடந்த 2010 ம் ஆண்டு முதல் ஜூலை 29 ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினத்தில் புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 9 வகையான புலிகள் இருந்த நிலையில் தற்போது 6 வகையான புலிகள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

advertisement by google

புலிகளின் அழிவுக்கு வேட்டையாடுதலும், அதன் வாழ்விடம் சுருங்கியதும் முக்கிய காரணமாக அறியப்படுகிறது. அரசின் நடவடிக்கைகளால் 2010 ம் ஆண்டு இந்தியாவில் 1706 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2014 ம் ஆண்டு கணக்கெடுப்பில் 2226 ஆக உயர்ந்துள்ளது. உலகின் 70 சதவீத புலிகள் இந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். அதிலும் புலிகளின் புகலிடமாக நீடித்து நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலைகள்.

advertisement by google

மனிதர்களுக்கான வளர்ச்சி என்ற பெயரில் புலிகளின் வாழ்விடத்தைச் சுருக்கக் கூடாது என்றும், வனத்திற்குள் தேவையான தண்ணீர், இரை போன்றவை இருந்தால் புலிகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான மோதல் நின்று விடும் என்கின்றனர் வனஉயிரின ஆராய்ச்சியாளர்கள்.

பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரமாக விளங்குவதற்கு புலிகள் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன.

மனித இனத்தின் அவசியத் தேவையான நீர், தூய்மையான காற்று இவை இரண்டும் கிடைக்க வனம் வேண்டும். வனம் செழிக்க புலிகள் வேண்டும்… அதனால், புலிகளை பாதுகாக்கும் வகையில் சர்வதேச புலிகள் தினத்தை கொண்டாட வேண்டியது அவசியம்…

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button