திருச்சி அக்னி சிறகுகள் தொண்டுநிறுவனமும் கிங் தொலைக்காட்சியும் இனைந்து ஊரடங்கு காலத்தில் 40 நாட்களாக ஏழைஎளிய 130க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி பருப்பு மளிகை பொருட்கள் வழங்கியும் திருநங்கைகளுக்கு கூடுதலாக உணவு வழங்கும் பணியும் செய்து அசத்தல்?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
திருச்சி அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனமும் கிங் தொலைக்காட்சியும் இணைந்து இந்த ஊரடங்கு காலத்தில் கடந்த 40 நாட்களாக ஏழை எளிய மக்களுக்கு திருச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் 130க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகிறோம். இதன் பகுதியாக இன்று 16/05/2020 திருவரங்கம் பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களும், மதிய உணவு வழங்கி உள்ளோம் இந்த நிகழ்ச்சியை அக்னி சிறகுகளின் தலைவர் திரு. இரா. மகேந்தரன் அவர்களும் கிங் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் திரு. வாசிம்ராஜ அவர்களும் துவக்கி வைத்தனர். இதில் திருநங்கைகள் பொதுமக்கள் என சுமார் 500 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அக்னி சிறகுகளின் செயலாளர் திரு. அஜிஸ் குமார், பொருளர் திரு. மிதுன், திரு. மதியழகன், திரு. அருள் ராபர்ட் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். விண்மீன்நியூஸ் செய்திகளுக்காக
(திரு. அருள் ராபர்ட்
செய்தி தொடர்பாளர்
அக்னி சிறகுகள்)