இந்தியாஉலக செய்திகள்கிரைம்வரலாறுவரி விளம்பரங்கள்

வரலாற்று ரீதியில் லடாக் இந்தியாவின் கட்டுபாட்டிலுள்ளது? சீனா அந்த பகுதியை சொந்தம் கொண்டாடுவதை ஏற்கமுடியாது?இந்தியா?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வன் பள்ளதாக்கு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது வரலாற்று ரீதியில் தெளிவாக உள்ளது என்றும் சீனா அந்த பகுதியை சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.

advertisement by google

லடாக் எல்லையில் இந்திய- சீன படைகள் மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

advertisement by google

மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் கூட்டினார்.

advertisement by google

அப்போது நமது மண்ணில் ஒரு இன்ஞ் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க முடியாது என அவர் சூளூரைத்தார்.

advertisement by google

இதைத் தொடர்ந்து சீனா வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லீ ஜீயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

advertisement by google

இதுகுறித்து இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிக்கை வெளியானது.

ஏப்ரல் மாதம் முதல் லடாக் எல்லையில் என்ன நடந்தது.. விரிவான அறிக்கை வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சகம்கிழக்கு லடாக்அதில் அவர் கால்வன் பள்ளத்தாக்கில் நடந்தது என்ன என்பது குறித்து பல கட்டமாக விவரித்துள்ளார்.

அவர் கூறுகையில் கிழக்கு லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கு இந்திய சீன எல்லையில் மேற்கு பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் சீன பகுதியில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் சீன ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாலைகள்அவ்வாறிருக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் சாலைகள், பாலங்கள் மற்றும் இதர உள்கட்டமைப்புகளை இந்திய ராணுவம் கட்டியது என்று கூறிய அவர் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் 16-17 தேதிகளில் நடந்தவை குறித்து விளக்கியுள்ளார்.

மேலும் சீன எல்லையில் இந்தியா ஊடுருவியதாகவும் அவர் பொய் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.அனுராக்இந்த நிலையில் சீனாவின் முரண்பாடான குற்றச்சாட்டை மறுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கால்வன் பகுதியின் நிலை குறித்து வரலாற்று ரீதியில் அனைத்தும் தெளிவாக உள்ளது. கால்வன் விவகாரத்தில் சீனாவின் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத உரிமைக் கோரல்களை ஏற்க முடியாது.ரோந்துகடந்த காலங்களில் சீனாவின் கட்டுப்பாட்டில் கால்வன் பள்ளத்தாக்கு இல்லை. இந்திய- சீனா எல்லை பகுதியில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதி உள்பட அனைத்து பகுதிகளின் இந்திய எல்லைகளும் இந்திய ராணுவத்தினருக்கு அத்துபடி. கடந்த மே 2020-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் ரோந்து மேற்கொள்ள சீன ராணுவம் தடையாக இருந்தது.

இந்தியா- சீனாஇது தொடர்பாக இரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளின் அடிப்படையில் தளபதிகள் ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்தியா ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என்ற சீனாவின் வாதத்தை நாங்கள் ஏற்கவில்லை. மாறாக இந்தியா- சீனா இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செயல்படுகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

எல்லை கட்டுப்பாட்டு பகுதிமே மாத மத்தியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கு பகுதியில் எல்லைத் தாண்ட சீன ராணுவம் முயற்சித்தது. இந்த முயற்சியை இந்திய ராணுவத்தினர் திறம்பட முறியடித்தனர். அதன் பிறகு எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து தீர்வு காண ராஜாங்க ரீதியிலும் ராணுவ ரீதியிலும் இரு தரப்பின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.சமரசம்கடந்த ஜூன் 6-ஆம் தேதி மூத்த ராணுவ அதிகாரிகள் லடாக் எல்லை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எல்லையில் அமைதி நிலவ சமரசம் மேற்கொள்வது என இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. தற்போதைய நிலையை மாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.சீன தரப்புஇந்த புரிந்துணர்வுகளிலிருந்து சீன தரப்பு மாறுபட்டு எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் குறுக்கே கட்டமைப்புகளை கட்ட முயற்சித்தது. இதை இந்திய ராணுவம் முறியடித்ததால் கடந்த ஜூன் 15-ஆம் தேதி சீன ராணுவத்தினர் நேரடி மோதலில் ஈடுபட்டனர். சீனா முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. எல்லையில் தனது செயல்பாடுகளை சீனா மறுஆய்வு செய்து சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தனது அறிக்கையில் அனுராக் கேட்டுக் கொண்டார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button