இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

கோவில்பட்டியில் பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

தவணை காலத்திற்கு அதிக வட்டி வசூல் செய்வதாக கூறி கோவில்பட்டி பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு மக்கள் தர்ணா போராட்டம்

advertisement by google

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவில்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் பலரும் வீட்டு உபயோக பொருள்கள், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருள்கள் வாங்கவும், சொந்த தேவைக்காக கடன் பெற்றுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மாத தவணை செலுத்த ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கையொட்டி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை கடைபிடிக்காமல் மாதத்தவணை செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அபராதம் விதிப்பதாக கூறப்படுகிறது.மேலும், மாதத்தவணையை செலுத்துவதற்காக வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வழங்கியிருக்கும் காசோலையை பஜாஜ் நிர்வாகம் வங்கியில் செலுத்தி பணம் எடுக்க முயற்சிப்பதாகவும், காசோலையில் பணம் இல்லாதபட்சத்தில் அதற்கு தனியாக வங்கியில் அபராதம் விதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிலருக்கு சிவில் ஸ்கேரும் குறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அலுவலகத்தின் தரையில் அமர்;ந்து பஜாஜ் நிறுவனத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் கிடைத்தும் கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து இரு தரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தினர். வரும் 12ந்தேதிக்குள்(வெள்ளி) வாடிக்கையாளர்களுக்கு பிரச்சினை சரி செய்யப்படும் என்று பஜாஜ் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button