இந்தியாஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரி விளம்பரங்கள்

லாக்டவுன்5.0 மாநில முதல்வர்களிடம் கருத்து கேட்ட அமித்ஷா?தீவிர ஆலோசனை? விரைவில் அடுத்த அறிவிப்பு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

லாக்டவுன் 5.0.. மாநில முதல்வர்களிடம் கருத்து கேட்ட அமித் ஷா.. தீவிர ஆலோசனை.. விரைவில் அறிவிப்பு!

advertisement by google

டெல்லி: லாக்டவுன் 5.0 குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்ற நிலையில் நாடு முழுக்க மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்கள் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

advertisement by google

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க லாக்டவுன் போடப்பட்டுள்ளது. லாக்டவுன் 3.0 வரை பெரிய அளவில் நாடு முழுக்க கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால் லாக்டவுன் 4.0ல் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கிறது.
லாக்டவுன் 4.0ல் கட்டுப்பாட்டு பகுதி இல்லாத மாற்ற இடங்களில் அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.முக்கியமாக இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையில் இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது லாக்டவுன் 5.0 அறிவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதிக தளர்வுகளுடன், சில நகரங்களில் மட்டும் கட்டுப்பாடுகளை விதித்து தளர்வுகளை கொண்டு வர இருக்கிறார்கள்.

advertisement by google

இந்த நிலையில் நாடு முழுக்க மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்கள் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி இருக்கிறார். ஊரடங்கு இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அமித் ஷா ஆலோசனை செய்து இருக்கிறார்.

advertisement by google

லாக்டவுன் 5.0வில் என்ன தளர்வுகள் கொண்டு வரலாம், என்ன மாதிரியான கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம், மக்களின் மனநிலை என்ன என்பது குறித்து அமித் ஷா ஆலோசனை செய்து இருக்கிறார். மாநிலங்களில் கொரோனா தடுப்பு எப்படி உள்ளது என்றும் புதிய திட்டங்கள் என்ன என்பது குறித்தும் கருத்துக்களை தெரிவியுங்கள் என்று அமித் ஷா மாநில முதல்வர்களிடம் கேட்டு இருக்கிறார்.
இதனால் லாக்டவுன் 5.0 குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button