பக்தி

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா✍️முளைப்பாரி ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி: கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.கலை நிகழ்ச்சிகள்விழாவையொட்டி தினமும் காலை 5.30 மணிக்கு நடைதிறப்பும், காலை 9 மணிக்கு காலை பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 4 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 6 மணிக்கு கோவில் முன்பு பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலாவும், இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபம் முன்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தெற்கு நந்தவனத்தில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 10 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், தீபாராதனை யும், மாலை 5 மணிக்கு பெண்கள் ஊர்வலம் நடைபெற்றது.அக்னிசட்டி ஊர்வலம்இதைத்தொடர்ந்து பூச்சட்டிகள் 21 அக்னிசட்டி, 51 அக்னிசட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு வண்ண ஊர்தியில் அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக் குடை யின் கீழ் வீற்றிருக்கும் தங்க குடம் வாலி ஏந்தி தீர்த்தம் எடுக்கும் திருக் கோளத்துடன் வீதி விழா வரும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் மண்டகப்படி தாரர்கள் சார்பில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று அதிகாலையில் பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் இடுதல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுவிழா நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு வாண வேடிக்கைகள் முழங்க முளைப்பாரி ஊர்வலத் துடன், மேள தாளத்துடன் அம்மன் பல்லக்கில் கோவிலை சுற்றி வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று இரவு 9 மணிக்கு கோவில் முன்பு அமைந்து உள்ள பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் மேலக்கரந்தை சந்தன செல்வி- நாகலட்சுமி குழுவினர் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடை பெற்றது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button