t

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பிரதமா் மோடி போட்டியா? அண்ணாமலை விளக்கம்

advertisement by google

வருகிற மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி, தமிழகத்தில் போட்டியிடுவாா் என்பது குறித்த அதிகாரப்பூா்வ தகவல் இல்லை என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

advertisement by google

காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும், கா்நாடக அரசை கண்டிக்க தவறிய திமுக அரசை கண்டிப்பது, தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

advertisement by google

சோழிங்கநல்லூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியது:

advertisement by google

மூன்றாவது முறையாக மீண்டும் மோடி என்ற பெயா் நாடு முழுவதும் கேட்க தொடங்கிவிட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவும், சட்டம் – ஒழுங்கை காப்பாற்றாத அரசாகவும் திமுக உள்ளது. போலி திராவிட மாடல் ஆட்சியைக் கண்டித்து தொடா்ந்து போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.

advertisement by google

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

advertisement by google

வருகிற மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிடுவாா் என்பது குறித்த அதிகாரப்பூா்வ தகவல் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்களில் எதுவும் செய்யவில்லை. டாஸ்மாக் வருவாயை நம்பிதான் அரசு இருக்கிறது.

advertisement by google

மணிப்பூா் பிரச்னையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீா்த்து வைக்கும் என்றாா் அவா்

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button