t

70வயசுலயும் எப்படி இளமையான எனர்ஜி – நடிகர் ரஜினி தகவல்?

advertisement by google

கொஞ்சம் ஆசை, கொஞ்சம் உணவு, கொஞ்சம் பேச்சு… இதை பண்ணினா 70 வயசுலயும் எனர்ஜி… ரஜினி தகவல் ஐதராபாத்: தமிழ் ரசிகர்களை போலவே தெலுங்கு ரசிகர்களும் என் மீது அதிக அன்பு செலுத்துவது என் பூர்வஜென்ம புண்ணியம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம், தர்பார். இதில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். நடிக்கின்றனர். புரொடக்‌ஷன்ஸ் அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. வரும் 9 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. படம்பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, இது மும்பையில் நடக்கும் போலீஸ் கதை. மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் என்றார். ஐதராபாத்தில் இந்நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், தெலுங்கில் வெளியிடும் என்.வி.பிரசாத், இயக்குனர் முருகதாஸ் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது ரஜினிகாந்த் பேசும்போது கூறியதாவது: தெலுங்கு ரசிகர்கள் தமிழ் ரசிகர்களை போலவே தெலுங்கு ரசிகர்களும் என் மீது அதிக அன்பு செலுத்துவது என் பூர்வஜென்ம புண்ணியம். 1976 ஆம் ஆண்டு தெலுங்கில் நான் நடித்த முதல் படம் அந்துலேனி கதா வெளியானது. இப்போது இங்கு கூடியிருப்பவர்களில் 99 சதவிகித பேர் அப்போது பிறந்திருக்கவே மாட்டீர்கள். பிறகு பெத்தராயுடு போன்ற படங்களில் நடித்தேன். நன்றாக ஓடின நான் நடிக்கும் படங்கள் தெலுங்கிலும் நன்றாக ஓடின. அதற்கு நான் நடித்தது மற்றும் காரணமல்லை. படம் பண்ணும்போதே சில மேஜிக்குகள் நடக்க வேண்டும். ஆனால், அது நம் கையில் இல்லை. முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று பல வருடங்களாக நினைத்தேன். அது இப்போது இந்தப் படம் மூலமாக நிறைவேறியிருக்கிறது. சில ஆலோசனை 70 வயதிலும் ஹீரோவாக நடிக்கிறீர்களே, எப்படி என்று கேட்கிறார்கள். இவ்வளவு எனர்ஜியுடன் இருக்க சில ஆலோசனைகள் சொல்கிறேன். ஆசையை குறையுங்கள். கவலையை குறையுங்கள். குறைவான உணவு எடுத்துக்கொள்ளுங்கள். குறைவாக தூங்குங்கள், குறைவாகப் பேசுங்கள். இதை கடைப்பிடித்தால் எனர்ஜி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button