இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பாஜகவில் இருந்து சிறுபான்மை நிர்வாகிகள் 48பேர் விலகல்? பாகுபாடு காட்றாங்க மோசமாக பேசுறாங்க? குமுறல்?

advertisement by google

பாகுபாடு காட்றாங்க.. மோசமாக பேசுறாங்க.. சிறுபான்மை நிர்வாகிகள் 48 பேர் பாஜகவில் இருந்து விலகல்.

advertisement by google

போபால்: மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த 48 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி பிரச்சனை காரணமாக கட்சியில் இருந்து விலகியுள்ளனர். கட்சித் தலைவர்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுவதாகவும் பாஜகவில் ஜனநாயகம் எஞ்சியிருக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

advertisement by google

CAA மற்றும் NRC க்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்புக்களைக் கட்டுப்படுத்த பாஜக கடுமையாக போராடி வருகிறது. இப்போது கட்சியிலும் அதனால் பிரச்சனைகளை சந்தித்துள்ளது.
மத்திய பிரதேச மாநில, போபாலில் உள்ள கட்சியின் சிறுபான்மை பிரிவினைச் சேர்ந்த 48 பாஜக நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய சிஏஏ சட்டம் தொடர்பாக பிரச்சனை எழுப்பி பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.

advertisement by google

கட்சியில்
விலகிய தலைவர்கள் கட்சிக்குள் பாகுபாடு காட்டுவதாகவும், கட்சி உறுப்பினர்கள் ஒரு சமூகத்திற்கு எதிராக மோசமான கருத்துக்களை தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

advertisement by google

எங்காவது பார்த்தீர்களா
போபாலின் பாஜக சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பதவியில் இருந்து விலகிய ஆதில்கான், ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பாராளுமன்றத்தில் ஒரு அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றிவிட்டு, பின்னர் வீடு வீடாகச் சென்று ஆதரவைக் கோருவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? என் கேட்டுள்ளார். குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய பிரச்சனைக்காக சனிக்கிழமை ஆதில்கான் பதவி விலகினார்.

advertisement by google

3 பேரின் ஆதிக்கத்தில்
பாஜக கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்கள் மாநில சிறுபான்மைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் பாஜக முன்பு ஷியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் கொள்கைகளைப் பின்பற்றியது, பாகுபாட்டில் ஈடுபடவில்லை, சிறுபான்மையினர் உட்பட அனைவரையும் அழைத்துச் சென்றதும் இப்போது அப்படியில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.

advertisement by google

ஜனநாயகம் இல்லை
ஊடக அறிக்கையின்படி, கட்சியில் இருந்து விலகிய தலைவர்கள் கட்சியில் ஜனநாயகம் எஞ்சவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் முழு கட்சியும் இரண்டு அல்லது மூன்று நபர்களால் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் அவர்களை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button