கிரைம்

தமிழகத்திலேயே கஞ்சா புழக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக தேனி மேற்கு தொடர்ச்சி மலைப்பிரதேச வனபகுதி, கஞ்சா, மது பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்

advertisement by google

தமிழகத்திலேயே கஞ்சா புழக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக தேனி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியை ஓட்டி அமைந்துள்ள இங்கு பெரும்பாலான வனப்பகு தியையொட்டி கஞ்சா பயிரிடப்பட்டு வந்தது. போலீசாரின் தீவிர நடவடிக்கையால் தற்போது கஞ்சா செடிகள் இல்லாத நிலை உள்ளது.இருந்தபோதும் ஆந்திரா போன்ற வெளி மாநில ங்களில் இருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டு தமிழக த்தின் பல மாவட்டங்களு க்கும், கேரளாவுக்கும் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க ஆபரேசன் திட்டத்தின்மூலம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இச்செயலில் ஈடுபட்டவர்களின் சொத்து க்கள் பறிமுதல் செய்ய ப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.அதன்பிறகு சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் பல இடங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடமலைக்குண்டு மயிலை ஒன்றியத்தி ற்குட்பட்ட கிராமங்களில் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. சிறை ப்பாறை, கடமலை க்குண்டு, வருசநாடு, குமணன்தொழு ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது.இந்த பழக்கத்திற்கு பெரியவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் அடிமையாகி வருகின்றனர். இதனால் படிக்கும் காலத்தி லேயே தங்கள் வாழ்வை இழந்து போதைக்கு அடிமையாகி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர். போதையில் மாணவர்கள் பிடிபட்டால் அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகின்றனர். ஆனால் கஞ்சா விற்பனை செய்பவ ர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்ப தில்லை.மேலும் கடமலைக்குண்டு, வருசநாடு, மூலக்கடை உள்ளிட்ட கிராமங்களில் 24 மணி நேரமும் தடை யில்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு கூடுதல் விலை கொடுத்தும் மதுபான ங்களை வாங்கி குடித்து வருகின்றனர்.காலையில் வேலைக்கு செல்லும் ெதாழிலா ள ர்களும் மதுபானம் குடித்து உடல்நலத்தை கெடுத்து வருகின்றனர். மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு மாண வர்கள் அடிமையா வதால் அவர்களை எவ்வாறு திருத்துவது என பெற்றோர்களும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.போதைக்காக திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவ ங்களிலும் மாணவர்கள் ஈடுபடும் அவலமும் ஏற்பட்டு வருகிறது. எனவே கிராமங்களில் கஞ்சா மற்றும் மது விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button