இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரி விளம்பரங்கள்

கோவில்பட்டியில் ஒரே இடத்தில் 100 நாட்டுப்புற கலைஞர்கள் இசைவாத்தியங்களை வாசித்து, நிவாரண உதவி அரசு வழங்க வலியுறுத்தி நூதன இசை முழக்கம்?முழு விவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

வாழ்வாதரம் முடக்கம் – கோவில்பட்டியில் ஒரே இடத்தில் இசை வாத்தியங்களை வாசித்த 100 நாட்டுப்புற கலைஞர்கள்

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேளம், நாதஸ்வரம், தப்பாட்டம் என ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் எவ்வித கொண்டாட்டங்களும் நடைபெறவில்லை என்பதால் நாட்டுப்புறகலைஞர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டுப்புறக்கலைஞர்களின் முக்கிய சீசன் காலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதரம் முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது. மற்ற துறைகளுக்கு அரசு வழங்கும் நிவாரணம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாகவும், எனவே அரசு எங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், ஒருவேளை உணவிற்கே கஷ்டமான சூழ்நிலையில் தங்களுடைய குடும்பம் உள்ளதாகவும், விழாவிற்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்தினை திரும்ப கொடுக்கும் சூழ்நிலை உள்ளதால் அரசு தங்களின் நிலையை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கடலையூர் சாலையில் ஒன்று திரண்ட 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாதஸ்வரக் கலைஞர் மாரியப்பன் தலைமையில் தங்கள் வாத்தியங்களை வாசித்து நூதன முறையில் அரசுக்கு தெரிவித்தனர். அரசு நிச்சயமாக உதவும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button